தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார், [QBR2] ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே. [QBR]
2. ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும் [QBR2] மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும் [QBR]
3. கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் [QBR2] அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம்.
4. ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும் [QBR2] பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன. [QBR]
5. இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது; [QBR2] அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார். [QBR]
6. நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன; [QBR2] யெகோவா தன் குரலை எழுப்புகிறார், பூமி உருகுகிறது.
7. சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; [QBR2] யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.
8. யெகோவாவினுடைய செயல்களையும் [QBR2] அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள். [QBR]
9. யெகோவா பூமியின் கடைசிவரை [QBR2] யுத்தங்களை நிறுத்துகிறார்; [QBR] அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்; [QBR2] கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார். [QBR]
10. யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்து [QBR2] நானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள். [QBR] நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன், [QBR2] நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்.”
11. சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; [QBR2] யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 46 / 150
சங்கீதம் 46:4
1 இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார், ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே. 2 ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும் மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும் 3 கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம். 4 ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன. 5 இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது; அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார். 6 நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன; யெகோவா தன் குரலை எழுப்புகிறார், பூமி உருகுகிறது. 7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார். 8 யெகோவாவினுடைய செயல்களையும் அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள். 9 யெகோவா பூமியின் கடைசிவரை யுத்தங்களை நிறுத்துகிறார்; அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்; கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார். 10 யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்து நானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள். நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன், நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்.” 11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 46 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References