1. அரசனைப் புகழ்ந்து, நான் கவிகளைப் பாடும்போது, [QBR2] அதின் உயர்வான கருப்பொருளால் என் உள்ளம் பொங்குகிறது; [QBR2] என் நாவு சிறந்த ஓர் எழுத்தாளனின் எழுதுகோல்.
2. மனுஷரெல்லாரிலும் அழகுமிக்கவர் நீரே, [QBR2] இறைவன் என்றென்றுமாய் உம்மை ஆசீர்வதித்திருப்பதால், [QBR2] உமது உதடுகளில் கிருபை பொழிகிறது.
3. வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்; [QBR2] மகிமையினாலும் மகத்துவத்தினாலும் உம்மை உடுத்திக்கொள்ளும். [QBR]
4. உண்மையும் தாழ்மையும் நீதியும் உயர, [QBR2] உமது மகத்துவத்தில் வெற்றியுடன் விரைந்து வாரும்; [QBR2] உமது வலதுகரம் பயங்கரமான செயல்களைச் செய்யட்டும். [QBR]
5. உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்; [QBR2] நாடுகள் உமது பாதத்தின்கீழ் வீழ்ச்சியடையட்டும். [QBR]
6. இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்; [QBR2] நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். [QBR]
7. நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்; [QBR2] ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, [QBR2] உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார். [QBR]
8. உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம் [QBR2] ஆகியவற்றின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. [QBR] யானைத் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகளிலிருந்து வரும், [QBR2] கம்பியிசைக் கருவிகளின் இசை உம்மை மகிழ்விக்கிறது. [QBR]
9. உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள். [QBR2] அரச மணமகளோ, ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.
10. மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி: [QBR2] உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. [QBR]
11. அரசர் உன் அழகில் பிரியப்படுவார்; [QBR2] அவரே உனது யெகோவா, ஆதலால் அவரை கனம்பண்ணு. [QBR]
12. தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்; [QBR2] செல்வந்தர் உன் தயவை நாடுவார்கள். [QBR]
13. இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்; [QBR2] அவளுடைய உடை தங்கச் சரிகையாயிருக்கிறது. [QBR]
14. அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு [QBR2] அரசனிடம் அழைத்துச் செல்லப்படுகிறாள்; [QBR] அவளுடைய தோழியர்களாகிய கன்னியர்கள் [QBR2] அவளைத் தொடர்ந்து உம்மிடம் அழைத்து வருகிறார்கள். [QBR]
15. அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் [QBR2] அவர்கள் அரசனின் அரண்மனைக்குள் வருகிறார்கள்.
16. உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்; [QBR2] அவர்களை நீர் நாடு முழுவதிலும் இளவரசர்களாகும்படி செய்வீர்.
17. நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும் [QBR2] உம்மைக் குறித்த நினைவுகளை நிலைபெறச் செய்வேன்; [QBR2] அதினால் மக்கள் கூட்டம் உம்மை என்றென்றைக்கும் துதிப்பார்கள். [PE]