1. [QS]அரசனைப் புகழ்ந்து, நான் கவிகளைப் பாடும்போது, [QE][QS2]அதின் உயர்வான கருப்பொருளால் என் உள்ளம் பொங்குகிறது; [QE][QS2]என் நாவு சிறந்த ஓர் எழுத்தாளனின் எழுதுகோல். [QE][PBR]
2. [QS]மனுஷரெல்லாரிலும் அழகுமிக்கவர் நீரே, [QE][QS2]இறைவன் என்றென்றுமாய் உம்மை ஆசீர்வதித்திருப்பதால், [QE][QS2]உமது உதடுகளில் கிருபை பொழிகிறது. [QE][PBR]
3. [QS]வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்; [QE][QS2]மகிமையினாலும் மகத்துவத்தினாலும் உம்மை உடுத்திக்கொள்ளும். [QE]
4. [QS]உண்மையும் தாழ்மையும் நீதியும் உயர, [QE][QS2]உமது மகத்துவத்தில் வெற்றியுடன் விரைந்து வாரும்; [QE][QS2]உமது வலதுகரம் பயங்கரமான செயல்களைச் செய்யட்டும். [QE]
5. [QS]உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்; [QE][QS2]நாடுகள் உமது பாதத்தின்கீழ் வீழ்ச்சியடையட்டும். [QE]
6. [QS]இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்; [QE][QS2]நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். [QE]
7. [QS]நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்; [QE][QS2]ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, [QE][QS2]உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார். [QE]
8. [QS]உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம் [QE][QS2]ஆகியவற்றின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. [QE][QS]யானைத் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகளிலிருந்து வரும், [QE][QS2]கம்பியிசைக் கருவிகளின் இசை உம்மை மகிழ்விக்கிறது. [QE]
9. [QS]உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள். [QE][QS2]அரச மணமகளோ, ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள். [QE][PBR]
10. [QS]மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி: [QE][QS2]உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. [QE]
11. [QS]அரசர் உன் அழகில் பிரியப்படுவார்; [QE][QS2]அவரே உனது யெகோவா, ஆதலால் அவரை கனம்பண்ணு. [QE]
12. [QS]தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்; [QE][QS2]செல்வந்தர் உன் தயவை நாடுவார்கள். [QE]
13. [QS]இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்; [QE][QS2]அவளுடைய உடை தங்கச் சரிகையாயிருக்கிறது. [QE]
14. [QS]அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு [QE][QS2]அரசனிடம் அழைத்துச் செல்லப்படுகிறாள்; [QE][QS]அவளுடைய தோழியர்களாகிய கன்னியர்கள் [QE][QS2]அவளைத் தொடர்ந்து உம்மிடம் அழைத்து வருகிறார்கள். [QE]
15. [QS]அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் [QE][QS2]அவர்கள் அரசனின் அரண்மனைக்குள் வருகிறார்கள். [QE][PBR]
16. [QS]உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்; [QE][QS2]அவர்களை நீர் நாடு முழுவதிலும் இளவரசர்களாகும்படி செய்வீர். [QE][PBR]
17. [QS]நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும் [QE][QS2]உம்மைக் குறித்த நினைவுகளை நிலைபெறச் செய்வேன்; [QE][QS2]அதினால் மக்கள் கூட்டம் உம்மை என்றென்றைக்கும் துதிப்பார்கள். [QE]