1. இறைவனே, வெகுகாலத்திற்குமுன் [QBR2] எங்கள் முன்னோர்களின் நாட்களில் நீர் செய்தவற்றை [QBR] அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்; [QBR2] அவற்றை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்டிருக்கிறோம். [QBR]
2. நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி, [QBR2] எங்கள் முன்னோர்களைக் குடியமர்த்தினீர்; [QBR] நீர் அந்நாட்டினரை தண்டித்து, [QBR2] எங்கள் முன்னோரைச் செழிக்கப் பண்ணினீர். [QBR]
3. அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை, [QBR2] அவர்களுடைய புயத்தால் அவர்கள் வெற்றிகொள்ளவும் இல்லை; [QBR] நீர் அவர்களில் பிரியம் கொள்வதினால் உமது வலதுகரமும் உமது வலிய புயமும் [QBR2] உமது முகத்தின் ஒளியுமே வெற்றிகொள்ளச் செய்தது.
4. இறைவனே, நீரே என் அரசன்; [QBR2] யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே. [QBR]
5. உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி, [QBR2] உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம். [QBR]
6. என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை, [QBR2] என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை; [QBR]
7. ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து, [QBR2] எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர். [QBR]
8. நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்; [QBR2] நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம்.
9. இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்; [QBR2] நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை. [QBR]
10. எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்; [QBR2] எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள். [QBR]
11. செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்; [QBR2] நாடுகளுக்கு மத்தியில் எங்களைச் சிதறடித்தீர். [QBR]
12. நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்; [QBR2] அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே.
13. எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்; [QBR2] எங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு எங்களை இகழ்ச்சியும் ஏளனமும் ஆக்கினீர். [QBR]
14. நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்; [QBR2] மக்கள் கூட்டம் எங்களைப் பார்த்து ஏளனமாய்த் தங்கள் தலையை அசைக்கிறார்கள். [QBR]
15. நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்; [QBR2] என் முகம் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது. [QBR]
16. என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும் [QBR2] பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன்.
17. நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்; [QBR2] உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்; [QBR2] ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன. [QBR]
18. எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, [QBR2] எங்கள் பாதங்கள் உமது வழியைவிட்டு விலகவுமில்லை. [QBR]
19. ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்; [QBR2] காரிருளினால் எங்களை மூடினீர்.
20. எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால், [QBR2] அல்லது வேறுநாட்டின் தெய்வமல்லாததை நோக்கி எங்கள் கைகளை நீட்டியிருந்தால், [QBR]
21. இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ? [QBR2] அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவராய் இருக்கிறாரே. [QBR]
22. ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்; [QBR2] அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்.
23. யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்? [QBR2] விழித்துக்கொள்ளும்! எங்களை என்றென்றும் புறக்கணியாதேயும். [QBR]
24. நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, [QBR2] எங்கள் துன்பத்தையும் நாங்கள் ஒடுக்கப்படுவதையும் மறந்துவிடுகிறீர்?
25. நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்; [QBR2] எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது. [QBR]
26. நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்; [QBR2] உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும். [PE]