1. இறைவனே, என் நீதியை மெய்ப்பித்துக் காட்டும்; [QBR2] இறை பக்தியற்ற நாட்டினருக்கு விரோதமாய் [QBR2] எனக்காக வழக்காடும், [QBR] வஞ்சகமும் கொடுமையுமான மனிதரிடமிருந்து [QBR2] என்னைத் தப்புவியும். [QBR]
2. ஏனெனில் நீரே என் இறைவன், என் கோட்டை. [QBR2] நீர் ஏன் என்னைப் புறக்கணித்துவிட்டீர்? [QBR] பகைவனால் ஒடுக்கப்பட்டு, [QBR2] நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்? [QBR]
3. உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்; [QBR2] அவை எனக்கு வழிகாட்டட்டும். [QBR] நீர் குடியிருக்கும் இடமான [QBR2] உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும். [QBR]
4. அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்; [QBR2] என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன். [QBR] இறைவனே, என் இறைவனே, [QBR2] யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன்.
5. என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? [QBR2] ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? [QBR] இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; [QBR2] நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக [QBR2] இன்னும் அவரைத் துதிப்பேன். [PE]