1. [QS]இறைவனே, என் நீதியை மெய்ப்பித்துக் காட்டும்; [QE][QS2]இறை பக்தியற்ற நாட்டினருக்கு விரோதமாய் [QE][QS2]எனக்காக வழக்காடும், [QE][QS]வஞ்சகமும் கொடுமையுமான மனிதரிடமிருந்து [QE][QS2]என்னைத் தப்புவியும். [QE]
2. [QS]ஏனெனில் நீரே என் இறைவன், என் கோட்டை. [QE][QS2]நீர் ஏன் என்னைப் புறக்கணித்துவிட்டீர்? [QE][QS]பகைவனால் ஒடுக்கப்பட்டு, [QE][QS2]நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்? [QE]
3. [QS]உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்; [QE][QS2]அவை எனக்கு வழிகாட்டட்டும். [QE][QS]நீர் குடியிருக்கும் இடமான [QE][QS2]உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும். [QE]
4. [QS]அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்; [QE][QS2]என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன். [QE][QS]இறைவனே, என் இறைவனே, [QE][QS2]யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன். [QE][PBR]
5. [QS]என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? [QE][QS2]ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? [QE][QS]இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; [QE][QS2]நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக [QE][QS2]இன்னும் அவரைத் துதிப்பேன். [QE]