1. {சங்கீதம் 42–72 } [QS] [PS]*கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். *[PE] மான் நீரோடைகளைத் தேடி ஏங்குவது போல், [QE][QS2]இறைவனே என் ஆத்துமா உம்மைத் தேடி ஏங்குகிறது. [QE]
2. [QS]என் ஆத்துமா இறைவனுக்காக, உயிருள்ள இறைவனுக்காக தாகம் கொள்கிறது; [QE][QS2]நான் எப்பொழுது இறைவனுடைய சமுகத்தில் வந்து நிற்பேன்? [QE]
3. [QS]மனிதர்களோ நாள்முழுதும் என்னைப் பார்த்து, [QE][QS2]“உன் இறைவன் எங்கே?” என்று கேட்பதால், [QE][QS]இரவும் பகலும் [QE][QS2]என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. [QE]
4. [QS]என் ஆத்துமா எனக்குள் உருகுகையில் [QE][QS2]இவைகள் என் நினைவுக்கு வருகின்றன: [QE][QS]முந்திய நாட்களில் நான் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து, [QE][QS2]இறைவனின் வீட்டிற்கு அவர்களோடு ஊர்வலமாய் நடந்து சென்றேன்; [QE][QS]பண்டிகை கொண்டாடும் மக்கள் கூட்டத்தின் நடுவே, [QE][QS2]மகிழ்ச்சியின் சத்தத்தோடும் துதியின் சத்தத்தோடும் நடந்து சென்றேன். [QE][PBR]
5. [QS]என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? [QE][QS2]ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? [QE][QS]இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; [QE][QS2]நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக [QE][QS2]இன்னும் அவரைத் துதிப்பேன். [QE][PBR]
6. [QS]என் இறைவனே, என் ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகிறது; [QE][QS2]அதினால் நான் எர்மோன் மலைகள் இருக்கும் [QE][QS]யோர்தான் நதி தொடங்கும் நாட்டிலிருந்தும், [QE][QS2]மீசார் மலையிலிருந்தும் உம்மை நினைவுகூருவேன். [QE]
7. [QS]உமது அருவிகளின் இரைச்சலினால் [QE][QS2]ஆழம் ஆழத்தைக் கூப்பிடுகிறது; [QE][QS]உம்முடைய எல்லா அலைகளும், [QE][QS2]பேரலைகளும் எனக்கு மேலாக மோதிச் செல்கின்றன. [QE][PBR]
8. [QS]பகலில் யெகோவா தமது உடன்படிக்கையின் அன்பை எனக்குக் கொடுக்கிறார்; [QE][QS2]இரவிலோ, அவருடைய பாடல் என்னோடு இருக்கிறது; [QE][QS2]என் வாழ்வின் இறைவனை நோக்கிய மன்றாட்டாகவே அது இருக்கிறது. [QE][PBR]
9. [QS]நான் என் கன்மலையாகிய இறைவனிடம், [QE][QS2]“நீர் ஏன் என்னை மறந்து விட்டீர்? [QE][QS]பகைவனால் ஒடுக்கப்பட்டு [QE][QS2]நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?” என்கிறேன். [QE]
10. [QS]நாளெல்லாம் என் பகைவர்கள் என்னைப் பார்த்து, [QE][QS2]“உன் இறைவன் எங்கே?” [QE][QS]என்று என்னைப் நிந்திப்பதால், [QE][QS2]என் எலும்புகள் சாவுக்கேதுவான வேதனையை அடைகின்றன. [QE][PBR]
11. [QS]என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? [QE][QS2]நீ ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? [QE][QS]இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; [QE][QS2]நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக [QE][QS2]இன்னும் அவரைத் துதிப்பேன். [QE]