1. [QS]ஏழைகள்மீது கவனம் வைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; [QE][QS2]துன்ப நாளில் யெகோவா அவர்களை விடுவிப்பார். [QE]
2. [QS]யெகோவா அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பார்; [QE][QS2]அவர்கள் பூமியில் ஆசீர்வாதமாக இருப்பார்கள்; [QE][QS2]யெகோவா அவர்களுடைய பகைவர்களின் கைக்கு அவர்களை அவனை ஒப்புவிக்கமாட்டார். [QE]
3. [QS]அவர்களுடைய வியாதிப்படுக்கையில் யெகோவா அவர்களைத் தாங்குவார்; [QE][QS2]படுக்கையில் வியாதியாய் இருக்கும் அவர்களுக்குச் சுகத்தைக் கொடுப்பார். [QE][PBR]
4. [QS]நான், “யெகோவாவே என்மேல் இரக்கமாயிரும்; [QE][QS2]உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறேன், [QE][QS2]என்னைக் குணமாக்கும்” என்று சொன்னேன். [QE]
5. [QS]என் பகைவர்கள் என்னைக்குறித்து தீமையானதைப் பேசி, [QE][QS2]“அவன் எப்பொழுது சாவான்? அவன் பெயர் எப்பொழுது அழியும்” என்று சொல்கிறார்கள். [QE]
6. [QS]அவர்களில் ஒருவன் என்னைப் பார்க்க வருகையில், [QE][QS2]தன் உள்ளத்தில் அவதூறை சேகரித்து உதட்டில் வஞ்சனையாகப் பேசுகிறான்; [QE][QS2]பின்பு அவன் வெளியே போய் அதைப் பரப்புகிறான். [QE][PBR]
7. [QS]என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு விரோதமாய் ஒன்றுகூடி, முணுமுணுத்து, [QE][QS2]அவர்கள் எனக்குப் பெருங்கேடு நினைத்து சொன்னதாவது: [QE]
8. [QS]“ஒரு கொடியநோய் அவனைப் பிடித்துக்கொண்டது; [QE][QS2]அவன் படுத்திருக்கிற இடத்தைவிட்டு ஒருபோதும் எழுந்திருக்கமாட்டான்.” [QE]
9. [QS]நான் நம்பியிருந்தவனும் [QE][QS2]அப்பத்தை என்னுடன் பகிர்ந்து சாப்பிட்டவனுமான, [QE][QS]என் நெருங்கிய நண்பன் தன் குதிகாலை [QE][QS2]எனக்கெதிராகத் தூக்கினான். [QE][PBR]
10. [QS]ஆனாலும் யெகோவாவே, நீர் என்மேல் இரக்கமாயிரும்; [QE][QS2]நான் அவர்களுக்குப் பதிற்செய்யும்படி என்னை எழுப்பும். [QE]
11. [QS]என் பகைவன் என்னை மேற்கொள்ளாதபடியால், [QE][QS2]நீர் என்னில் பிரியமாய் இருக்கிறீரென்று நான் அறிகிறேன். [QE]
12. [QS]நீர் என் உத்தமத்தில் என்னை ஆதரித்து, [QE][QS2]உமது சமுகத்தில் எப்போதும் என்னை வைத்துக்கொள்கிறீர். [QE][PBR] [PBR]
13. [QS]இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு [QE][QS2]நித்திய நித்தியமாய் துதி உண்டாகட்டும். [QE][QCS]ஆமென், ஆமென். [QCE]