1. [QS]நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; [QE][QS2]அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார். [QE]
2. [QS]அழிவின் குழியிலிருந்தும் [QE][QS2]மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார், [QE][QS]அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி, [QE][QS2]நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார். [QE]
3. [QS]எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான [QE][QS2]புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார். [QE][QS]அநேகர் அதைக்கண்டு பயந்து, [QE][QS2]யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள். [QE][PBR]
4. [QS]பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும், [QE][QS2]அகந்தை உள்ளவர்களைச் சாராமலும், [QE][QS2]யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE]
5. [QS]என் இறைவனாகிய யெகோவாவே, [QE][QS2]நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும் [QE][QS2]உம்முடைய திட்டங்களும் அநேகம். [QE][QS]உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை; [QE][QS2]அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால், [QE][QS2]அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள். [QE][PBR]
6. [QS]பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; [QE][QS2]தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை; [QE][QS2]ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர். [QE]
7. [QS]அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்; [QE][QS2]புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே. [QE]
8. [QS]என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்; [QE][QS2]உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னேன். [QE][PBR]
9. [QS]மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்; [QE][QS2]யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி [QE][QS2]நான் என் உதடுகளை மூடுவதில்லை. [QE]
10. [QS]நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை; [QE][QS2]உமது உண்மையையும், [QE][QS]இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன். [QE][QS2]உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை. [QE][PBR]
11. [QS]யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்; [QE][QS2]உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக. [QE]
12. [QS]ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன; [QE][QS2]என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன். [QE][QS]என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை; [QE][QS2]அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. [QE]
13. [QS]யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்; [QE][QS2]யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். [QE][PBR]
14. [QS]என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும் [QE][QS2]வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; [QE][QS]எனது அழிவை விரும்புகிற யாவரும் [QE][QS2]அவமானமடைந்து திரும்புவார்களாக. [QE]
15. [QS]என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள் [QE][QS2]அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக. [QE]
16. [QS]ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் [QE][QS2]உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; [QE][QS]உமது இரட்சிப்பை விரும்புவோர், “யெகோவா பெரியவர்!” [QE][QS2]என்று எப்போதும் சொல்வார்களாக. [QE][PBR]
17. [QS]நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; [QE][QS2]யெகோவா என்னை நினைப்பாராக. [QE][QS]நீரே என் துணை, நீரே என் மீட்பர்; [QE][QS2]என் இறைவனே, தாமதியாதேயும். [QE]