தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; [QBR2] அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார். [QBR]
2. அழிவின் குழியிலிருந்தும் [QBR2] மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார், [QBR] அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி, [QBR2] நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார். [QBR]
3. எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான [QBR2] புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார். [QBR] அநேகர் அதைக்கண்டு பயந்து, [QBR2] யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.
4. பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும், [QBR2] அகந்தை உள்ளவர்களைச் சாராமலும், [QBR2] யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QBR]
5. என் இறைவனாகிய யெகோவாவே, [QBR2] நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும் [QBR2] உம்முடைய திட்டங்களும் அநேகம். [QBR] உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை; [QBR2] அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால், [QBR2] அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள்.
6. பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; [QBR2] தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை; [QBR2] ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர். [QBR]
7. அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்; [QBR2] புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே. [QBR]
8. என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்; [QBR2] உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னேன்.
9. மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்; [QBR2] யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி [QBR2] நான் என் உதடுகளை மூடுவதில்லை. [QBR]
10. நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை; [QBR2] உமது உண்மையையும், [QBR] இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன். [QBR2] உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை.
11. யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்; [QBR2] உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக. [QBR]
12. ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன; [QBR2] என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன். [QBR] என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை; [QBR2] அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. [QBR]
13. யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்; [QBR2] யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
14. என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும் [QBR2] வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; [QBR] எனது அழிவை விரும்புகிற யாவரும் [QBR2] அவமானமடைந்து திரும்புவார்களாக. [QBR]
15. என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள் [QBR2] அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக. [QBR]
16. ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் [QBR2] உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; [QBR] உமது இரட்சிப்பை விரும்புவோர், “யெகோவா பெரியவர்!” [QBR2] என்று எப்போதும் சொல்வார்களாக.
17. நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; [QBR2] யெகோவா என்னை நினைப்பாராக. [QBR] நீரே என் துணை, நீரே என் மீட்பர்; [QBR2] என் இறைவனே, தாமதியாதேயும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 40 / 150
சங்கீதம் 40:9
1 நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார். 2 அழிவின் குழியிலிருந்தும் மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார், அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி, நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார். 3 எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார். அநேகர் அதைக்கண்டு பயந்து, யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள். 4 பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும், அகந்தை உள்ளவர்களைச் சாராமலும், யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 5 என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும் உம்முடைய திட்டங்களும் அநேகம். உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை; அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால், அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள். 6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை; ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர். 7 அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்; புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே. 8 என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்; உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னேன். 9 மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்; யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி நான் என் உதடுகளை மூடுவதில்லை. 10 நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை; உமது உண்மையையும், இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன். உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை. 11 யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்; உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக. 12 ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன; என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன். என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை; அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. 13 யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். 14 என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும் வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; எனது அழிவை விரும்புகிற யாவரும் அவமானமடைந்து திரும்புவார்களாக. 15 என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள் அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக. 16 ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; உமது இரட்சிப்பை விரும்புவோர், “யெகோவா பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக. 17 நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; யெகோவா என்னை நினைப்பாராக. நீரே என் துணை, நீரே என் மீட்பர்; என் இறைவனே, தாமதியாதேயும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 40 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References