தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. நீதியுள்ள என் இறைவனே, [QBR2] நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். [QBR] என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; [QBR2] என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும்.
2. மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? [QBR2] எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்? [QBR]
3. யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; [QBR2] நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார்.
4. நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; [QBR2] நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, [QBR2] உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள். [QBR]
5. நீதியான பலிகளைச் செலுத்தி, [QBR2] யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்.
6. “எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; [QBR2] யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும். [QBR]
7. தானியமும் புதுத் திராட்சை இரசமும் [QBR2] நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட [QBR2] அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர்.
8. நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; [QBR2] ஏனெனில் யெகோவாவே, [QBR2] நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 150
சங்கீதம் 4:112
1 நீதியுள்ள என் இறைவனே, நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும். 2 மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்? 3 யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார். 4 நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள். 5 நீதியான பலிகளைச் செலுத்தி, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள். 6 “எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும். 7 தானியமும் புதுத் திராட்சை இரசமும் நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர். 8 நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; ஏனெனில் யெகோவாவே, நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References