1. [QS]நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, [QE][QS2]என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன். [QE][QS]கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை, [QE][QS2]நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.” [QE]
2. [QS]நான் பேசாமல் ஊமையாயிருந்தேன், [QE][QS2]நலமானதையும் பேசாமல் இருந்தேன். [QE][QS]ஆனால் என் வேதனை அதிகரித்தது; [QE]
[QS2]3. என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது; [QE][QS]நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது; [QE][QS2]அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்: [QE][PBR]
4. [QS]“யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும், [QE][QS2]என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்; [QE][QS2]என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும். [QE]
5. [QS]என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்; [QE][QS2]எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது; [QE][QS]பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும் [QE][QS2]எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே. [QE][PBR]
6. [QS]“மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்; [QE][QS2]அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும், [QE][QS2]அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான். [QE][PBR]
7. [QS]“ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்? [QE][QS2]என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. [QE]
8. [QS]என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்; [QE][QS2]என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும். [QE]
9. [QS]நான் மவுனமாயிருந்தேன்; [QE][QS2]நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன். [QE]
10. [QS]உமது வாதையை என்னை விட்டகற்றும்; [QE][QS2]உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன். [QE]
11. [QS]பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது, [QE][QS2]நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்; [QE][QS2]நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே. [QE][PBR]
12. [QS]“யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; [QE][QS2]உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்; [QE][QS2]என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம். [QE][QS]என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே, [QE][QS2]நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும், [QE][QS2]குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன். [QE]
13. [QS]நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே, [QE][QS2]நான் திரும்பவும் மகிழும்படியாய், [QE][QS2]உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.” [QE]