1. [QS]யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்; [QE][QS2]உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும். [QE]
2. [QS]உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன; [QE][QS2]உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது. [QE]
3. [QS]உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை; [QE][QS2]என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. [QE]
4. [QS]நான் தாங்கமுடியாத சுமையைப்போல [QE][QS2]என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று. [QE][PBR]
5. [QS]என் மதிகேட்டினால் [QE][QS2]எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. [QE]
6. [QS]நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்; [QE][QS2]நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன். [QE]
7. [QS]எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; [QE][QS2]என் உடலில் சுகமே இல்லை. [QE]
8. [QS]நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்; [QE][QS2]உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன். [QE][PBR]
9. [QS]யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; [QE][QS2]என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை. [QE]
10. [QS]என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது; [QE][QS2]என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று. [QE]
11. [QS]எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், [QE][QS2]என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். [QE][QS2]என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள். [QE]
12. [QS]என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; [QE][QS2]எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்; [QE][QS2]நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள். [QE][PBR]
13. [QS]நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், [QE][QS2]ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். [QE]
14. [QS]காது காதுகேட்காதவனும், [QE][QS2]தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன். [QE]
15. [QS]யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; [QE][QS2]என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும். [QE]
16. [QS]“என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்; [QE][QS2]அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன். [QE][PBR]
17. [QS]நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; [QE][QS2]என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. [QE]
18. [QS]என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்; [QE][QS2]என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன். [QE]
19. [QS]காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்; [QE][QS2]எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள். [QE]
20. [QS]நான் நன்மையானதைச் செய்தபோதும், [QE][QS2]நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள் [QE][QS2]என்னைக் குற்றப்படுத்துகிறார்கள். [QE][PBR]
21. [QS]யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; [QE][QS2]என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம். [QE]
22. [QS]என் இரட்சகராகிய யெகோவாவே, [QE][QS2]எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். [QE]