தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்; [QBR2] உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும். [QBR]
2. உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன; [QBR2] உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது. [QBR]
3. உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை; [QBR2] என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. [QBR]
4. நான் தாங்கமுடியாத சுமையைப்போல [QBR2] என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று.
5. என் மதிகேட்டினால் [QBR2] எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. [QBR]
6. நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்; [QBR2] நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன். [QBR]
7. எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; [QBR2] என் உடலில் சுகமே இல்லை. [QBR]
8. நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்; [QBR2] உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன்.
9. யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; [QBR2] என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை. [QBR]
10. என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது; [QBR2] என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று. [QBR]
11. எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், [QBR2] என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். [QBR2] என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள். [QBR]
12. என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; [QBR2] எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்; [QBR2] நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள்.
13. நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், [QBR2] ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். [QBR]
14. காது காதுகேட்காதவனும், [QBR2] தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன். [QBR]
15. யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; [QBR2] என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும். [QBR]
16. “என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்; [QBR2] அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன்.
17. நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; [QBR2] என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. [QBR]
18. என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்; [QBR2] என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன். [QBR]
19. காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்; [QBR2] எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள். [QBR]
20. நான் நன்மையானதைச் செய்தபோதும், [QBR2] நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள் [QBR2] என்னைக் குற்றப்படுத்துகிறார்கள்.
21. யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; [QBR2] என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம். [QBR]
22. என் இரட்சகராகிய யெகோவாவே, [QBR2] எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 38 / 150
சங்கீதம் 38:10
1 யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்; உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும். 2 உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன; உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது. 3 உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. 4 நான் தாங்கமுடியாத சுமையைப்போல என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று. 5 என் மதிகேட்டினால் எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. 6 நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்; நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன். 7 எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; என் உடலில் சுகமே இல்லை. 8 நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்; உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன். 9 யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை. 10 என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது; என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று. 11 எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள். 12 என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்; நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள். 13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். 14 காது காதுகேட்காதவனும், தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன். 15 யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும். 16 “என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்; அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன். 17 நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 18 என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்; என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன். 19 காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்; எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள். 20 நான் நன்மையானதைச் செய்தபோதும், நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள் என்னைக் குற்றப்படுத்துகிறார்கள். 21 யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம். 22 என் இரட்சகராகிய யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 38 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References