1. [QS]தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே; [QE][QS2]அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. [QE]
2. [QS]ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்; [QE][QS2]பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள். [QE][PBR]
3. [QS]யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; [QE][QS2]நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு. [QE]
4. [QS]யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு, [QE][QS2]அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார். [QE][PBR]
5. [QS]யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி; [QE][QS2]அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார். [QE]
6. [QS]அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும், [QE][QS2]உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார். [QE][PBR]
7. [QS]யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து, [QE][QS2]அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு; [QE][QS]மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும் [QE][QS2]அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே. [QE][PBR]
8. [QS]கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு; [QE][QS2]பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும். [QE]
9. [QS]ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்; [QE][QS2]ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள் [QE][QS2]நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள். [QE][PBR]
10. [QS]இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்; [QE][QS2]நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள். [QE]
11. [QS]ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு, [QE][QS2]சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள். [QE][PBR]
12. [QS]கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து, [QE][QS2]அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள். [QE]
13. [QS]ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்; [QE][QS2]அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார். [QE][PBR]
14. [QS]ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும், [QE][QS2]நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும் [QE][QS]கொடியவர்கள் வாளை உருவி [QE][QS2]வில்லை வளைக்கிறார்கள். [QE]
15. [QS]ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்; [QE][QS2]அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும். [QE][PBR]
16. [QS]கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும், [QE][QS2]நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது. [QE]
17. [QS]ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்; [QE][QS2]நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். [QE][PBR]
18. [QS]குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்; [QE][QS2]அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும். [QE]
19. [QS]அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்; [QE][QS2]பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள். [QE][PBR]
20. [QS]ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள், [QE][QS2]யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும், [QE][QS2]அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள். [QE][PBR]
21. [QS]கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்; [QE][QS2]ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள். [QE]
22. [QS]யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் [QE][QS2]நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; [QE][QS2]அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள். [QE][PBR]
23. [QS]ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், [QE][QS2]அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார். [QE]
24. [QS]அவன் இடறினாலும் விழமாட்டான்; [QE][QS2]ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார். [QE][PBR]
25. [QS]நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்; [QE][QS2]ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ, [QE][QS2]அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை. [QE]
26. [QS]நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்; [QE][QS2]அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். [QE][PBR]
27. [QS]தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்; [QE][QS2]அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய். [QE]
28. [QS]ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்; [QE][QS2]தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார். [QE][QS2]அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள். [QE][PBR] [QS2]ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம். [QE]
29. [QS]நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி, [QE][QS2]அதில் என்றும் குடியிருப்பார்கள். [QE][PBR]
30. [QS]நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; [QE][QS2]அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும். [QE]
31. [QS]இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; [QE][QS2]அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை. [QE][PBR]
32. [QS]நீதிமான்களைக் கொல்லும்படி, [QE][QS2]கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள். [QE]
33. [QS]ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை; [QE][QS2]நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை. [QE][PBR]
34. [QS]யெகோவாவை எதிர்பார்த்திருந்து, [QE][QS2]அவருடைய வழியைக் கைக்கொள். [QE][QS]நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்; [QE][QS2]கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய். [QE][PBR]
35. [QS]கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்; [QE][QS2]அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான். [QE]
36. [QS]ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்; [QE][QS2]நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை. [QE][PBR]
37. [QS]குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்; [QE][QS2]சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. [QE]
38. [QS]ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; [QE][QS2]கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும். [QE][PBR]
39. [QS]நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; [QE][QS2]கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார். [QE]
40. [QS]யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்; [QE][QS2]அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால், [QE][QS2]கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார். [QE]