1. [QS]இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி: [QE][QS2]கொடியவர்களின் பாவம் அவர்களுடைய இருதயங்களில் நிலைத்திருக்கிறது; [QE][QS]அவர்களுடைய கண்களில் [QE][QS2]இறைவனைப்பற்றிய பயம் இல்லை. [QE][PBR]
2. [QS]அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால், [QE][QS2]அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதும் இல்லை; அதை வெறுப்பதுமில்லை. [QE]
3. [QS]அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன; [QE][QS2]அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள். [QE]
4. [QS]அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்; [QE][QS2]பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்; [QE][QS2]தீமையானதை விடாதிருக்கிறார்கள். [QE][PBR]
5. [QS]யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் [QE][QS2]உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது. [QE]
6. [QS]உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது, [QE][QS2]உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது. [QE][QS2]யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். [QE]
7. [QS]இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது! [QE][QS2]மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள். [QE]
8. [QS]உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்; [QE][QS2]நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர். [QE]
9. [QS]ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; [QE][QS2]உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம். [QE][PBR]
10. [QS]உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும் [QE][QS2]இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும். [QE]
11. [QS]அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக; [QE][QS2]கொடியவர்களின் கை என்னைத் துரத்தி விடாதிருப்பதாக. [QE]
12. [QS]தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்! [QE][QS2]அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி, வீசி எறியப்பட்டுக் கிடக்கிறார்கள். [QE]