தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி: [QBR2] கொடியவர்களின் பாவம் அவர்களுடைய இருதயங்களில் நிலைத்திருக்கிறது; [QBR] அவர்களுடைய கண்களில் [QBR2] இறைவனைப்பற்றிய பயம் இல்லை.
2. அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால், [QBR2] அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதும் இல்லை; அதை வெறுப்பதுமில்லை. [QBR]
3. அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன; [QBR2] அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள். [QBR]
4. அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்; [QBR2] பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்; [QBR2] தீமையானதை விடாதிருக்கிறார்கள்.
5. யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் [QBR2] உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது. [QBR]
6. உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது, [QBR2] உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது. [QBR2] யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். [QBR]
7. இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது! [QBR2] மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள். [QBR]
8. உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்; [QBR2] நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர். [QBR]
9. ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; [QBR2] உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம்.
10. உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும் [QBR2] இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும். [QBR]
11. அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக; [QBR2] கொடியவர்களின் கை என்னைத் துரத்தி விடாதிருப்பதாக. [QBR]
12. தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்! [QBR2] அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி, வீசி எறியப்பட்டுக் கிடக்கிறார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 150
சங்கீதம் 36:56
1 இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி: கொடியவர்களின் பாவம் அவர்களுடைய இருதயங்களில் நிலைத்திருக்கிறது; அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை. 2 அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால், அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதும் இல்லை; அதை வெறுப்பதுமில்லை. 3 அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன; அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள். 4 அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்; பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்; தீமையானதை விடாதிருக்கிறார்கள். 5 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது. 6 உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது, உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது. யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். 7 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது! மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள். 8 உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்; நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர். 9 ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம். 10 உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும் இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும். 11 அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக; கொடியவர்களின் கை என்னைத் துரத்தி விடாதிருப்பதாக. 12 தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்! அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி, வீசி எறியப்பட்டுக் கிடக்கிறார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References