1. யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, [QBR2] என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும். [QBR]
2. கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்; [QBR2] எனக்கு உதவிசெய்ய எழுந்து வாரும். [QBR]
3. என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும் [QBR2] எறிவேலையும் நீட்டி இப்படி சொல்லும்: [QBR] நீர் என் ஆத்துமாவுக்கு, [QBR2] “நானே உனது இரட்சிப்பு.”
4. எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் [QBR2] அவமானம் அடைந்து வெட்கப்படுவார்களாக; [QBR] என்னை அழிக்கச் சதிசெய்கிறவர்கள் [QBR2] மனம் தளர்ந்து பின்வாங்கிப் போவார்களாக. [QBR]
5. யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் [QBR2] காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக; [QBR]
6. யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், [QBR2] அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக.
7. காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், [QBR2] காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும், [QBR]
8. அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; [QBR2] அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; [QBR2] அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக. [QBR]
9. அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு, [QBR2] அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சியடையும். [QBR]
10. “யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? [QBR2] நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும், [QBR] ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்” [QBR2] என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும்.
11. இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்; [QBR2] எனக்குத் தெரியாதவைகளை அவர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். [QBR]
12. நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து, [QBR2] என்னை உதவியின்றி விட்டுவிடுகிறார்கள். [QBR]
13. ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ, [QBR2] நான் துக்கவுடை உடுத்தி உபவாசத்துடன் என்னைத் தாழ்த்தினேன். [QBR] எனது மன்றாட்டுகள் பதிலளிக்கப்படாமல் என்னிடமே திரும்பிவந்தபோது, [QBR2]
14. எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும் [QBR2] நான் அவர்களுக்காக துக்கித்தேன்; [QBR] என் தாய்க்காக அழுகிறது போல, [QBR2] துக்கத்தில் என் தலையை குனிந்து கொண்டேன். [QBR]
15. ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்; [QBR2] நான் எதிர்பாராத வேளையில் தாக்குகிறவர்கள், எனக்கெதிராய் ஒன்றுகூடி, [QBR2] ஓய்வின்றி என்னை நிந்தித்தார்கள். [QBR]
16. அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து, [QBR2] என்னைப் பார்த்து பற்களைக் கடித்தார்கள்.
17. யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்? [QBR2] அவர்கள் செய்யும் அழிவுகளிலிருந்து என்னையும் [QBR2] சிங்கங்களிடமிருந்து விலையுயர்ந்த என் உயிரையும் தப்புவியும். [QBR]
18. அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; [QBR2] மக்கள் கூட்டங்களின் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன். [QBR]
19. காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள் [QBR2] என்னைப் பழித்து மகிழாமலும், [QBR] காரணமின்றி என்னை வெறுக்கிறவர்கள் [QBR2] தவறான நோக்கத்தோடு கண் சிமிட்டாமலும் இருக்கட்டும். [QBR]
20. அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை; [QBR2] நாட்டில் அமைதியாய் வாழ்கிறவர்களுக்கு எதிராய் [QBR2] வஞ்சகமாய்த் திட்டமிடுகிறார்கள். [QBR]
21. அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: [QBR2] “ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.”
22. யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். [QBR2] யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும். [QBR]
23. விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்; [QBR2] என் இறைவனே, யெகோவாவே, எனக்காகப் போராடும். [QBR]
24. என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம் [QBR2] என்னை நியாயம் விசாரியும்; [QBR2] அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும். [QBR]
25. “ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!” [QBR2] என்று அவர்கள் சிந்திக்க விடாதேயும் அல்லது [QBR2] “நாங்கள் அவனை விழுங்கிவிட்டோம்” என்று அவர்கள் சொல்லவிடாதேயும்.
26. என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும் [QBR2] வெட்கமடைந்து கலங்குவார்களாக; [QBR] எனக்கு மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்கள் எல்லோரும் வெட்கத்தாலும் [QBR2] அவமானத்தாலும் மூடப்படுவார்களாக. [QBR]
27. என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள், [QBR2] சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் ஆர்ப்பரிப்பார்களாக. [QBR] “தனது பணியாளனின் நலனை விரும்புகிற யெகோவா உயர்த்தப்படுவாராக” [QBR2] என்று அவர்கள் எப்பொழுதும் சொல்லட்டும்.
28. எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், [QBR2] நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும். [PE]