1. [QS]நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; [QE][QS2]அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது. [QE]
2. [QS]யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; [QE][QS2]பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள். [QE]
3. [QS]அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QE][QS2]திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள். [QE][PBR]
4. [QS]யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், [QE][QS2]அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது. [QE]
5. [QS]யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; [QE][QS2]பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது. [QE][PBR]
6. [QS]யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, [QE][QS2]அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன. [QE]
7. [QS]அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; [QE][QS2]ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார். [QE]
8. [QS]பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; [QE][QS2]உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக. [QE]
9. [QS]ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; [QE][QS2]அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது. [QE][PBR]
10. [QS]யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; [QE][QS2]அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார். [QE]
11. [QS]ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், [QE][QS2]அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும். [QE][PBR]
12. [QS]எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, [QE][QS2]எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ [QE][QS2]அவர்கள் பாக்கியவான்கள். [QE]
13. [QS]யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, [QE][QS2]எல்லா மனிதர்களையும் காண்கிறார்; [QE]
14. [QS]தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் [QE][QS2]அனைவரையும் கவனிக்கிறார். [QE]
15. [QS]அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, [QE][QS2]அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார். [QE][PBR]
16. [QS]எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; [QE][QS2]எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை. [QE]
17. [QS]விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; [QE][QS2]அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது. [QE]
18. [QS]யெகோவாவுக்குப் பயந்து, [QE][QS2]அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் [QE][QS2]அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து, [QE]
19. [QS]மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், [QE][QS2]பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார். [QE][PBR]
20. [QS]நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; [QE][QS2]அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார். [QE]
21. [QS]நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் [QE][QS2]எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன. [QE]
22. [QS]யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, [QE][QS2]உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக. [QE]