1. நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; [QBR2] அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது. [QBR]
2. யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; [QBR2] பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள். [QBR]
3. அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QBR2] திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்.
4. யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், [QBR2] அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது. [QBR]
5. யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; [QBR2] பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது.
6. யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, [QBR2] அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன. [QBR]
7. அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; [QBR2] ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார். [QBR]
8. பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; [QBR2] உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக. [QBR]
9. ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; [QBR2] அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது.
10. யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; [QBR2] அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார். [QBR]
11. ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், [QBR2] அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும்.
12. எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, [QBR2] எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ [QBR2] அவர்கள் பாக்கியவான்கள். [QBR]
13. யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, [QBR2] எல்லா மனிதர்களையும் காண்கிறார்; [QBR]
14. தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் [QBR2] அனைவரையும் கவனிக்கிறார். [QBR]
15. அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, [QBR2] அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
16. எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; [QBR2] எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை. [QBR]
17. விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; [QBR2] அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது. [QBR]
18. யெகோவாவுக்குப் பயந்து, [QBR2] அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் [QBR2] அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து, [QBR]
19. மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், [QBR2] பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.
20. நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; [QBR2] அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார். [QBR]
21. நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் [QBR2] எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன. [QBR]
22. யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, [QBR2] உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக. [PE]