தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ, [QE][QS2]யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ, [QE][QS2]அவர்கள் பாக்கியவான்கள். [QE]
2. [QS]யாருடைய பாவத்தைக்குறித்து, [QE][QS2]அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ, [QE][QS2]யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள். [QE][PBR]
3. [QS]நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது, [QE][QS2]தினமும் என் அழுகையினால், [QE][QS2]என் எலும்புகள் பலவீனமாயிற்று. [QE]
4. [QS]இரவும் பகலும் [QE][QS2]உமது கரம் பாரமாயிருந்தது; [QE][QS]ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல, [QE][QS2]என் பெலன் வறண்டுபோயிற்று. [QE][PBR]
5. [QS]அதின்பின் நான் என் பாவத்தை [QE][QS2]உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்; [QE][QS]என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை. [QE][QS2]நான், “யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்” [QE][QS]என்று சொன்னேன்; [QE][QS2]நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர். [QE][PBR]
6. [QS]ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில் [QE][QS2]உம்மை நோக்கி மன்றாடட்டும்; [QE][QS]பெருவெள்ளம் எழும்பும்போது [QE][QS2]நிச்சயமாய் அது அவர்களை அணுகாது. [QE]
7. [QS]நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்; [QE][QS2]நீர் என்னை இக்கட்டிலிருந்து பாதுகாத்து, [QE][QS2]மீட்பின் பாடல்களால் என்னைச் சூழ்ந்துகொள்வீர். [QE][PBR]
8. [QS]யெகோவா சொல்கிறதாவது: “நான் உனக்கு அறிவுறுத்தி, [QE][QS2]நீ போகவேண்டிய வழியை உனக்குப் போதிப்பேன்; [QE][QS2]நான் உனக்கு கரிசனையோடு ஆலோசனை சொல்லுவேன். [QE]
9. [QS]புத்தியில்லாத குதிரையைப் போலவோ, [QE][QS2]கோவேறு கழுதையைப் போலவோ நீ இருக்கவேண்டாம்; [QE][QS]கடிவாளத்தினால் கட்டுப்படுத்தப்பட்டால் ஒழிய, [QE][QS2]அவை உன் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை.” [QE]
10. [QS]கொடுமையானவனுக்கு வரும் கேடுகள் அநேகமானவை, [QE][QS2]ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறவனையோ, [QE][QS2]அவருடைய உடன்படிக்கையின் அன்பு சூழ்ந்துகொள்கிறது. [QE][PBR]
11. [QS]நீதிமான்களே, நீங்கள் யெகோவாவிடம் களிகூர்ந்து மகிழுங்கள்; [QE][QS2]உள்ளத்தில் உண்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் துதி பாடுங்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 32 / 150
1 யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். 2 யாருடைய பாவத்தைக்குறித்து, அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ, யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள். 3 நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது, தினமும் என் அழுகையினால், என் எலும்புகள் பலவீனமாயிற்று. 4 இரவும் பகலும் உமது கரம் பாரமாயிருந்தது; ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல, என் பெலன் வறண்டுபோயிற்று. 5 அதின்பின் நான் என் பாவத்தை உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்; என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை. நான், “யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்” என்று சொன்னேன்; நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர். 6 ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில் உம்மை நோக்கி மன்றாடட்டும்; பெருவெள்ளம் எழும்பும்போது நிச்சயமாய் அது அவர்களை அணுகாது. 7 நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்; நீர் என்னை இக்கட்டிலிருந்து பாதுகாத்து, மீட்பின் பாடல்களால் என்னைச் சூழ்ந்துகொள்வீர். 8 யெகோவா சொல்கிறதாவது: “நான் உனக்கு அறிவுறுத்தி, நீ போகவேண்டிய வழியை உனக்குப் போதிப்பேன்; நான் உனக்கு கரிசனையோடு ஆலோசனை சொல்லுவேன். 9 புத்தியில்லாத குதிரையைப் போலவோ, கோவேறு கழுதையைப் போலவோ நீ இருக்கவேண்டாம்; கடிவாளத்தினால் கட்டுப்படுத்தப்பட்டால் ஒழிய, அவை உன் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை.” 10 கொடுமையானவனுக்கு வரும் கேடுகள் அநேகமானவை, ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறவனையோ, அவருடைய உடன்படிக்கையின் அன்பு சூழ்ந்துகொள்கிறது. 11 நீதிமான்களே, நீங்கள் யெகோவாவிடம் களிகூர்ந்து மகிழுங்கள்; உள்ளத்தில் உண்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் துதி பாடுங்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 32 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References