1. [QS]யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; [QE][QS2]என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; [QE][QS2]உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். [QE]
2. [QS]உமது செவியை எனக்குச் சாய்த்து, [QE][QS2]என்னைத் தப்புவிக்க விரைவாய் வாரும்; [QE][QS]என் புகலிடமான கன்மலையாகவும், [QE][QS2]என்னைக் காப்பாற்றும் பலமான கோட்டையாகவும் இரும். [QE]
3. [QS]நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், [QE][QS2]உமது பெயரின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை வழிநடத்தும். [QE]
4. [QS]நீரே என் புகலிடம், [QE][QS2]ஆகையால் எனக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணியிலிருந்து என்னை விடுவியும். [QE]
5. [QS]உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்; [QE][QS2]யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும். [QE][PBR]
6. [QS]இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்; [QE][QS2]நான் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறேன். [QE]
7. [QS]நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்; [QE][QS2]ஏனெனில், நீர் என் வேதனையைக் கண்டு, [QE][QS2]என் ஆத்தும துயரத்தை அறிந்திருக்கிறீர். [QE]
8. [QS]நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல், [QE][QS2]விசாலமான இடத்தில் என் பாதங்களை நிறுத்தினீர். [QE][PBR]
9. [QS]யெகோவாவே, நான் துன்பத்தில் இருப்பதால், என்னில் இரக்கமாயிரும்; [QE][QS2]துக்கத்தினால் என் கண்கள் பலவீனமடைகின்றன; [QE][QS2]துயரத்தினால் என் ஆத்துமாவும் உடலும் பெலனில்லாமல் போகின்றன. [QE]
10. [QS]என் வாழ்க்கை வேதனையிலேயே கழிந்துபோயிற்று; [QE][QS2]அழுது புலம்பியே என் வருடங்களும் கடந்துபோயிற்று. [QE][QS]என் துன்பத்தினால்[* துன்பத்தினால் அல்லது குற்றம் ] என் பெலம் குன்றி, [QE][QS2]என் எலும்புகளும் பெலனற்றுப் போகின்றன. [QE]
11. [QS]என் பகைவர்கள் அனைவரின் நிமித்தம் [QE][QS2]நான் என் அயலாருக்கு நிந்தையாகிறேன்; [QE][QS]என் நண்பர்களுக்கு நான் பயங்கரமானேன்; [QE][QS2]தெருவில் என்னைக் காண்பவர்கள் என்னைவிட்டு விலகி ஓடிப்போனார்கள். [QE]
12. [QS]நான் இறந்துவிட்ட ஒருவனைப் போல, அவர்கள் என்னை மறந்துபோனார்கள்; [QE][QS2]நான் ஓர் உடைந்த பாத்திரத்தைப் போலானேன். [QE]
13. [QS]அநேகர் என்னை அவதூறாய்ப் பேசுகிறதைக் கேட்கிறேன், [QE][QS2]“எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம் இருக்கிறது!” [QE][QS]அவர்கள் எனக்கு விரோதமாக சூழ்ச்சிசெய்து, [QE][QS2]என் உயிரை வாங்க சதித்திட்டம் போடுகிறார்கள். [QE][PBR]
14. [QS]ஆனாலும் யெகோவாவே, நான் உம்மிலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்; [QE][QS2]“நீரே என் இறைவன்” என்று நான் சொன்னேன். [QE]
15. [QS]என் நாட்கள் உமது கரங்களில் இருக்கிறது; [QE][QS2]என் பகைவரிடமிருந்தும் [QE][QS2]என்னைத் துரத்துகிறவரிடமிருந்தும் விடுவியும். [QE]
16. [QS]உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்; [QE][QS2]உமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைக் காப்பாற்றும். [QE]
17. [QS]யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; [QE][QS2]நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; [QE][QS]கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் [QE][QS2]மவுனமாய்க் கிடக்கட்டும். [QE]
18. [QS]பெருமையோடும் அகந்தையோடும், [QE][QS2]நீதிமான்களுக்கு விரோதமாய்ப் பேசும் [QE][QS2]அவர்களுடைய பொய் உதடுகள் ஊமையாகட்டும். [QE][PBR]
19. [QS]உமக்குப் பயப்படுகிறவர்களுக்காக [QE][QS2]நீர் குவித்து வைத்திருக்கும் நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன; [QE][QS]உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறவர்கள்மேல், [QE][QS2]மனிதர் காணும்படியாக நீர் பொழிகின்ற நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன. [QE]
20. [QS]நீர் அவர்களை மனிதரின் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கி, [QE][QS2]உமது சமுகத்தின் அடைக்கலத்தில் மறைத்துவைக்கிறீர்; [QE][QS]அவர்களைக் குற்றப்படுத்தும் நாவுகளுக்கு விலக்கி, [QE][QS2]உமது தங்குமிடத்தில் அவர்களை ஒளித்துவைக்கிறீர். [QE][PBR]
21. [QS]யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, [QE][QS2]ஏனெனில் பட்டணம் முற்றுகையிடப்பட்டு நான் சிக்கலில் இருந்தபோது, [QE][QS2]அவர் தமது உடன்படிக்கை அன்பின் அதிசயத்தை எனக்குக் காண்பித்தார். [QE]
22. [QS]நான் அதிர்ச்சியடைந்து, [QE][QS2]“உமது பார்வையிலிருந்து அகற்றப்பட்டேன்” என்று சொன்னேன்; [QE][QS]ஆனாலும் நான் உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, [QE][QS2]இரக்கத்திற்காக நான் கதறி அழுததை நீர் கேட்டீர். [QE][PBR]
23. [QS]யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, அவரில் அன்புகூருங்கள்! [QE][QS2]யெகோவா அவருக்கு உண்மையாய் இருப்பவர்களைப் பாதுகாக்கிறார்; [QE][QS2]ஆனால் பெருமையுள்ளவர்களுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். [QE]
24. [QS]யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே, [QE][QS2]நீங்கள் எல்லோரும் பெலன்கொண்டு தைரியமாய் இருங்கள். [QE]