1. [QS]யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன், [QE][QS2]ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்; [QE][QS2]என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை. [QE]
2. [QS]என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; [QE][QS2]நீர் என்னை சுகமாக்கினீர். [QE]
3. [QS]யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; [QE][QS2]குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். [QE][PBR]
4. [QS]யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்; [QE][QS2]அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள். [QE]
5. [QS]அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே, [QE][QS2]ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்; [QE][QS]இரவிலே அழுகை இருந்தாலும், [QE][QS2]காலையிலோ மகிழ்ச்சி வரும். [QE][PBR]
6. [QS]நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது, [QE][QS2]“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன். [QE]
7. [QS]யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது, [QE][QS2]என்னுடைய மலையை[* அதாவது, சீயோன் மலை ] உறுதியாய் நிற்கப்பண்ணினீர்; [QE][QS]ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது, [QE][QS2]நான் மனம்சோர்ந்து போனேன். [QE][PBR]
8. [QS]யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்; [QE][QS2]யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன். [QE]
9. [QS]“நான் அழிந்து [QE][QS2]குழிக்குள் போவதால் என்ன பயன்? [QE][QS]தூசி உம்மைத் துதிக்குமோ? [QE][QS2]அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ? [QE]
10. [QS]யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும். [QE][QS2]யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.” [QE][PBR]
11. [QS]என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்; [QE][QS2]நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு, [QE][QS2]மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர். [QE]
12. [QS]ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்; [QE][QS2]என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன். [QE]