1. [QS]யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! [QE][QS2]எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள். [QE]
2. [QS]அநேகர் என்னைக்குறித்து, [QE][QS2]“இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள்.[* எபிரெய மொழிப் பிரதிகளில் சேலா என்ற வார்த்தை இங்கும் 4 மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது. ] [QE][PBR]
3. [QS]ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், [QE][QS2]என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். [QE]
4. [QS]நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; [QE][QS2]அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார். [QE][PBR]
5. [QS]நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; [QE][QS2]யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன். [QE]
6. [QS]எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், [QE][QS2]நான் பயப்படமாட்டேன். [QE][PBR]
7. [QS]யெகோவாவே, எழுந்தருளும்; [QE][QS2]என் இறைவனே, என்னை விடுவியும். [QE][QS]என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, [QE][QS2]கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும். [QE][PBR]
8. [QS]யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. [QE][QS2]உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக. [QE]