தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; [QBR2] அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள். [QBR]
2. யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; [QBR2] பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
3. யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது; [QBR2] மகிமையின் இறைவன் முழங்குகிறார்; [QBR2] பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார். [QBR]
4. யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது; [QBR2] யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது. [QBR]
5. யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; [QBR2] யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார். [QBR]
6. அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும், [QBR2] சிரியோன் [*அதாவது, எர்மோன் மலை] மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார். [QBR]
7. யெகோவாவினுடைய குரல் [QBR2] மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது. [QBR]
8. யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது; [QBR2] காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார். [QBR]
9. யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது. [QBR2] காடுகளை அழித்து வெளியாக்குகிறது; [QBR] அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.
10. யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; [QBR2] யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். [QBR]
11. யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்; [QBR2] யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 150
சங்கீதம் 29:3
1 பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள். 2 யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள். 3 யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது; மகிமையின் இறைவன் முழங்குகிறார்; பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார். 4 யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது; யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது. 5 யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார். 6 அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும், சிரியோன் *அதாவது, எர்மோன் மலை மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார். 7 யெகோவாவினுடைய குரல் மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது. 8 யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது; காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார். 9 யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது. காடுகளை அழித்து வெளியாக்குகிறது; அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள். 10 யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். 11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்; யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References