1. [QS]பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; [QE][QS2]அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள். [QE]
2. [QS]யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; [QE][QS2]பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள். [QE][PBR]
3. [QS]யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது; [QE][QS2]மகிமையின் இறைவன் முழங்குகிறார்; [QE][QS2]பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார். [QE]
4. [QS]யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது; [QE][QS2]யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது. [QE]
5. [QS]யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; [QE][QS2]யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார். [QE]
6. [QS]அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும், [QE][QS2]சிரியோன்[* அதாவது, எர்மோன் மலை ] மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார். [QE]
7. [QS]யெகோவாவினுடைய குரல் [QE][QS2]மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது. [QE]
8. [QS]யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது; [QE][QS2]காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார். [QE]
9. [QS]யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது. [QE][QS2]காடுகளை அழித்து வெளியாக்குகிறது; [QE][QS]அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள். [QE][PBR]
10. [QS]யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; [QE][QS2]யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். [QE]
11. [QS]யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்; [QE][QS2]யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார். [QE]