தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QBR2] நீர் என் கன்மலை, [QBR2] எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். [QBR] நீர் மவுனமாகவே இருப்பீரானால், [QBR2] நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன். [QBR]
2. நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, [QBR2] நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக, [QBR] என் கைகளை உயர்த்தி [QBR2] இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும்.
3. கொடியவர்களுடனும் [QBR2] தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும், [QBR] அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்; [QBR2] ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள். [QBR]
4. அவர்களுடைய செயல்களுக்காகவும் [QBR2] அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்; [QBR] அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து, [QBR2] அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும்.
5. யெகோவாவினுடைய செயல்களுக்கும், [QBR2] அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால், [QBR] யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்; [QBR2] மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார்.
6. யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; [QBR2] ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார். [QBR]
7. யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; [QBR2] என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். [QBR] என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; [QBR2] நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.
8. யெகோவா தமது மக்களின் பெலனானவர்; [QBR2] தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே. [QBR]
9. இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, [QBR2] உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; [QBR2] அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 150
சங்கீதம் 28:6
1 யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் என் கன்மலை, எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். நீர் மவுனமாகவே இருப்பீரானால், நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன். 2 நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக, என் கைகளை உயர்த்தி இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும். 3 கொடியவர்களுடனும் தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும், அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள். 4 அவர்களுடைய செயல்களுக்காகவும் அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்; அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து, அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும். 5 யெகோவாவினுடைய செயல்களுக்கும், அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால், யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்; மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார். 6 யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார். 7 யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன். 8 யெகோவா தமது மக்களின் பெலனானவர்; தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே. 9 இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References