தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QE][QS2]நீர் என் கன்மலை, [QE][QS2]எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். [QE][QS]நீர் மவுனமாகவே இருப்பீரானால், [QE][QS2]நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன். [QE]
2. [QS]நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, [QE][QS2]நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக, [QE][QS]என் கைகளை உயர்த்தி [QE][QS2]இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும். [QE][PBR]
3. [QS]கொடியவர்களுடனும் [QE][QS2]தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும், [QE][QS]அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்; [QE][QS2]ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள். [QE]
4. [QS]அவர்களுடைய செயல்களுக்காகவும் [QE][QS2]அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்; [QE][QS]அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து, [QE][QS2]அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும். [QE][PBR]
5. [QS]யெகோவாவினுடைய செயல்களுக்கும், [QE][QS2]அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால், [QE][QS]யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்; [QE][QS2]மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார். [QE][PBR]
6. [QS]யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; [QE][QS2]ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார். [QE]
7. [QS]யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; [QE][QS2]என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். [QE][QS]என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; [QE][QS2]நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன். [QE][PBR]
8. [QS]யெகோவா தமது மக்களின் பெலனானவர்; [QE][QS2]தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே. [QE]
9. [QS]இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, [QE][QS2]உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; [QE][QS2]அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 150
1 யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் என் கன்மலை, எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். நீர் மவுனமாகவே இருப்பீரானால், நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன். 2 நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக, என் கைகளை உயர்த்தி இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும். 3 கொடியவர்களுடனும் தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும், அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள். 4 அவர்களுடைய செயல்களுக்காகவும் அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்; அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து, அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும். 5 யெகோவாவினுடைய செயல்களுக்கும், அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால், யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்; மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார். 6 யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார். 7 யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன். 8 யெகோவா தமது மக்களின் பெலனானவர்; தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே. 9 இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References