1. [QS]யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார், [QE][QS2]நான் யாருக்குப் பயப்படுவேன்? [QE][QS]யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார், [QE][QS2]நான் யாருக்குப் பயப்படுவேன்? [QE][PBR]
2. [QS]தீய மனிதர் என்னை விழுங்கும்படி [QE][QS2]எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது, [QE][QS]எனது பகைவரும் விரோதிகளுமான [QE][QS2]அவர்களே தடுமாறி விழுவார்கள். [QE]
3. [QS]ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும், [QE][QS2]என் இருதயம் பயப்படாது; [QE][QS]எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும், [QE][QS2]அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன். [QE][PBR]
4. [QS]நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், [QE][QS2]அதையே நான் தேடுகிறேன்: [QE][QS]நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், [QE][QS2]அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் [QE][QS]நான் என் வாழ்நாள் முழுவதும் [QE][QS2]யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன். [QE]
5. [QS]ஏனெனில் துன்ப நாளில், [QE][QS2]அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; [QE][QS]அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, [QE][QS2]கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார். [QE][PBR]
6. [QS]அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள [QE][QS2]பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; [QE][QS]அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு, [QE][QS2]யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன். [QE][PBR]
7. [QS]யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; [QE][QS2]என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும். [QE]
8. [QS]என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால், [QE][QS2]யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன். [QE]
9. [QS]உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; [QE][QS2]கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்; [QE][QS2]நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர். [QE][QS]என் இரட்சிப்பின் இறைவனே, [QE][QS2]என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம். [QE]
10. [QS]என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், [QE][QS2]யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார். [QE]
11. [QS]யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; [QE][QS2]என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம் [QE][QS2]என்னை நேரான பாதையில் நடத்தும். [QE]
12. [QS]என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; [QE][QS2]ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும் [QE][QS2]என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். [QE][PBR]
13. [QS]நானோ வாழ்வோரின் நாட்டில் [QE][QS2]யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று [QE][QS2]இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். [QE]
14. [QS]யெகோவாவுக்குக் காத்திரு; [QE][QS2]பெலன்கொண்டு தைரியமாயிரு, [QE][QS2]யெகோவாவுக்கே காத்திரு. [QE]