தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார், [QBR2] நான் யாருக்குப் பயப்படுவேன்? [QBR] யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார், [QBR2] நான் யாருக்குப் பயப்படுவேன்?
2. தீய மனிதர் என்னை விழுங்கும்படி [QBR2] எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது, [QBR] எனது பகைவரும் விரோதிகளுமான [QBR2] அவர்களே தடுமாறி விழுவார்கள். [QBR]
3. ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும், [QBR2] என் இருதயம் பயப்படாது; [QBR] எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும், [QBR2] அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.
4. நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், [QBR2] அதையே நான் தேடுகிறேன்: [QBR] நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், [QBR2] அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் [QBR] நான் என் வாழ்நாள் முழுவதும் [QBR2] யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன். [QBR]
5. ஏனெனில் துன்ப நாளில், [QBR2] அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; [QBR] அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, [QBR2] கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.
6. அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள [QBR2] பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; [QBR] அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு, [QBR2] யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.
7. யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; [QBR2] என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும். [QBR]
8. என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால், [QBR2] யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன். [QBR]
9. உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; [QBR2] கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்; [QBR2] நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர். [QBR] என் இரட்சிப்பின் இறைவனே, [QBR2] என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம். [QBR]
10. என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், [QBR2] யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார். [QBR]
11. யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; [QBR2] என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம் [QBR2] என்னை நேரான பாதையில் நடத்தும். [QBR]
12. என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; [QBR2] ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும் [QBR2] என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.
13. நானோ வாழ்வோரின் நாட்டில் [QBR2] யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று [QBR2] இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். [QBR]
14. யெகோவாவுக்குக் காத்திரு; [QBR2] பெலன்கொண்டு தைரியமாயிரு, [QBR2] யெகோவாவுக்கே காத்திரு. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 150
சங்கீதம் 27:120
1 யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார், நான் யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார், நான் யாருக்குப் பயப்படுவேன்? 2 தீய மனிதர் என்னை விழுங்கும்படி எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது, எனது பகைவரும் விரோதிகளுமான அவர்களே தடுமாறி விழுவார்கள். 3 ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும், என் இருதயம் பயப்படாது; எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும், அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன். 4 நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், அதையே நான் தேடுகிறேன்: நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் நான் என் வாழ்நாள் முழுவதும் யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன். 5 ஏனெனில் துன்ப நாளில், அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார். 6 அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு, யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன். 7 யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும். 8 என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால், யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன். 9 உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்; நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர். என் இரட்சிப்பின் இறைவனே, என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம். 10 என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார். 11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம் என்னை நேரான பாதையில் நடத்தும். 12 என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும் என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். 13 நானோ வாழ்வோரின் நாட்டில் யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். 14 யெகோவாவுக்குக் காத்திரு; பெலன்கொண்டு தைரியமாயிரு, யெகோவாவுக்கே காத்திரு.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References