தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், [QE][QS2]ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்; [QE][QS]நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், [QE][QS2]நான் தடுமாறுவதில்லை. [QE]
2. [QS]யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், [QE][QS2]என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்; [QE]
3. [QS]ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு [QE][QS2]எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; [QE][QS2]நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன். [QE][PBR]
4. [QS]ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை, [QE][QS2]வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை; [QE]
5. [QS]தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், [QE][QS2]கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன். [QE]
6. [QS]யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, [QE][QS2]உமது துதியைப் பிரசித்தப்படுத்தி, [QE]
7. [QS]உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, [QE][QS2]உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன். [QE][PBR]
8. [QS]யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, [QE][QS2]நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன். [QE]
9. [QS]பாவிகளோடு என் ஆத்துமாவையும், [QE][QS2]இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும். [QE]
10. [QS]அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; [QE][QS2]அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன. [QE]
11. [QS]ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்; [QE][QS2]என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும். [QE][PBR]
12. [QS]என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; [QE][QS2]நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 26 / 150
1 யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், நான் தடுமாறுவதில்லை. 2 யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்; 3 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன். 4 ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை; 5 தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன். 6 யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உமது துதியைப் பிரசித்தப்படுத்தி, 7 உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன். 8 யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன். 9 பாவிகளோடு என் ஆத்துமாவையும், இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும். 10 அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன. 11 ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்; என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும். 12 என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 26 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References