1. யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், [QBR2] ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்; [QBR] நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், [QBR2] நான் தடுமாறுவதில்லை. [QBR]
2. யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், [QBR2] என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்; [QBR]
3. ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு [QBR2] எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; [QBR2] நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன்.
4. ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை, [QBR2] வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை; [QBR]
5. தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், [QBR2] கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன். [QBR]
6. யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, [QBR2] உமது துதியைப் பிரசித்தப்படுத்தி, [QBR]
7. உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, [QBR2] உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
8. யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, [QBR2] நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன். [QBR]
9. பாவிகளோடு என் ஆத்துமாவையும், [QBR2] இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும். [QBR]
10. அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; [QBR2] அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன. [QBR]
11. ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்; [QBR2] என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும்.
12. என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; [QBR2] நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன். [PE]