1. [QS]பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை, [QE][QS2]உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள். [QE]
2. [QS]ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி, [QE][QS2]தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார். [QE][PBR]
3. [QS]யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்? [QE][QS2]அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்? [QE]
4. [QS]சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும் [QE][QS2]தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும் [QE][QS2]பொய் சத்தியம் செய்யாதவனுமே. [QE][PBR]
5. [QS]அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள், [QE][QS2]தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள். [QE]
6. [QS]அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே, [QE][QS2]யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே. [QE][PBR]
7. [QS]வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; [QE][QS2]பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; [QE][QS2]மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள். [QE]
8. [QS]இந்த மகிமையின் அரசன் யார்? [QE][QS2]அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா, [QE][QS2]அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா. [QE]
9. [QS]வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; [QE][QS2]பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; [QE][QS2]மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள். [QE]
10. [QS]மகிமையின் அரசனான இவர் யார்? [QE][QS2]அவர் சேனைகளின் யெகோவா; [QE][QS2]அவரே மகிமையின் அரசன். [QE]