தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை, [QBR2] உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள். [QBR]
2. ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி, [QBR2] தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.
3. யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்? [QBR2] அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்? [QBR]
4. சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும் [QBR2] தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும் [QBR2] பொய் சத்தியம் செய்யாதவனுமே.
5. அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள், [QBR2] தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள். [QBR]
6. அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே, [QBR2] யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே.
7. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; [QBR2] பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; [QBR2] மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள். [QBR]
8. இந்த மகிமையின் அரசன் யார்? [QBR2] அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா, [QBR2] அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா. [QBR]
9. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; [QBR2] பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; [QBR2] மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள். [QBR]
10. மகிமையின் அரசனான இவர் யார்? [QBR2] அவர் சேனைகளின் யெகோவா; [QBR2] அவரே மகிமையின் அரசன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 150
சங்கீதம் 24:118
1 பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை, உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள். 2 ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி, தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார். 3 யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்? அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்? 4 சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும் தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும் பொய் சத்தியம் செய்யாதவனுமே. 5 அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள், தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள். 6 அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே, யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே. 7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள். 8 இந்த மகிமையின் அரசன் யார்? அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா, அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா. 9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள். 10 மகிமையின் அரசனான இவர் யார்? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் அரசன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References