1. யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது. [QBR2]
2. அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார், [QBR] அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார். [QBR2]
3. அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார். [QBR] தமது பெயருக்காக அவர் என்னை, [QBR2] நீதியின் பாதைகளில் நடத்துகிறார். [QBR]
4. மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே [QBR2] நான் நடந்தாலும் [QBR] நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன், [QBR2] ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்; [QBR] உமது கோலும் உமது தடியும், [QBR2] எனக்கு ஆறுதல் அளிக்கின்றன.
5. என் பகைவர்களின் சமுகத்தில் [QBR2] நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர். [QBR] நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; [QBR2] என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. [QBR]
6. நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும் [QBR2] நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும், [QBR] நான் யெகோவாவினுடைய வீட்டில் [QBR2] என்றென்றுமாய் வாழ்வேன். [PE]