1. [QS]என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? [QE][QS2]என்னைக் காப்பாற்றாமல், [QE][QS2]நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? [QE]
2. [QS]என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; [QE][QS2]இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை. [QE][PBR]
3. [QS]ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் [QE][QS2]நீர் பரிசுத்தர். [QE]
4. [QS]உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்; [QE][QS2]நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர். [QE]
5. [QS]அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்; [QE][QS2]உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை. [QE][PBR]
6. [QS]ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல; [QE][QS2]மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். [QE]
7. [QS]என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள் [QE]
8. [QS]“அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான், [QE][QS2]யெகோவா அவனை இரட்சிக்கட்டும். [QE][QS]அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால் [QE][QS2]அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள். [QE][PBR]
9. [QS]ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர். [QE][QS2]நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே [QE][QS2]என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர். [QE]
10. [QS]நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்; [QE][QS2]நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர். [QE][PBR]
11. [QS]நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்; [QE][QS2]ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது, [QE][QS2]உதவிசெய்ய ஒருவருமில்லை. [QE][PBR]
12. [QS]அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; [QE][QS2]பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன. [QE]
13. [QS]தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல, [QE][QS2]அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள். [QE]
14. [QS]என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; [QE][QS2]என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின; [QE][QS]என் இருதயம் மெழுகு போலாகி [QE][QS2]எனக்குள்ளே உருகிப் போயிற்று. [QE]
15. [QS]என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று; [QE][QS2]என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது; [QE][QS2]என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர். [QE][PBR]
16. [QS]நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; [QE][QS2]தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது; [QE][QS2]என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள். [QE]
17. [QS]என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; [QE][QS2]மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள். [QE]
18. [QS]அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு, [QE][QS2]என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள். [QE][PBR]
19. [QS]ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; [QE][QS2]என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். [QE]
20. [QS]என்னை வாளுக்குத் தப்புவியும்; [QE][QS2]என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும். [QE]
21. [QS]சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்; [QE][QS2]காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][PBR]
22. [QS]அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன், [QE][QS2]திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன். [QE]
23. [QS]யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; [QE][QS2]யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; [QE][QS2]இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள். [QE]
24. [QS]ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை, [QE][QS2]அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை. [QE][QS]அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை; [QE][QS2]ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார். [QE][PBR]
25. [QS]நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்; [QE][QS2]உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக [QE][QS2]நான் என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். [QE]
26. [QS]ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; [QE][QS2]யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்; [QE][QS2]அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக. [QE][PBR]
27. [QS]பூமியின் கடைசிகளெல்லாம் [QE][QS2]யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்; [QE][QS]நாடுகளின் குடும்பங்கள் எல்லாம் [QE][QS2]அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும். [QE]
28. [QS]ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; [QE][QS2]அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார். [QE][PBR]
29. [QS]பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்; [QE][QS2]மரித்து மண்ணுக்குத் திரும்புவோரும், தன் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் [QE][QS2]அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவார்கள். [QE]
30. [QS]பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்; [QE][QS2]வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும். [QE]
31. [QS]அவர்கள் அவருடைய நீதியை, [QE][QS2]இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்: [QE][QS2]அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள். [QE]