தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? [QBR2] என்னைக் காப்பாற்றாமல், [QBR2] நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? [QBR]
2. என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; [QBR2] இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை.
3. ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் [QBR2] நீர் பரிசுத்தர். [QBR]
4. உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்; [QBR2] நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர். [QBR]
5. அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்; [QBR2] உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை.
6. ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல; [QBR2] மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். [QBR]
7. என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்; [QBR2] அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள் [QBR]
8. “அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான், [QBR2] யெகோவா அவனை இரட்சிக்கட்டும். [QBR] அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால் [QBR2] அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள்.
9. ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர். [QBR2] நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே [QBR2] என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர். [QBR]
10. நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்; [QBR2] நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர்.
11. நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்; [QBR2] ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது, [QBR2] உதவிசெய்ய ஒருவருமில்லை.
12. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; [QBR2] பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன. [QBR]
13. தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல, [QBR2] அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள். [QBR]
14. என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; [QBR2] என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின; [QBR] என் இருதயம் மெழுகு போலாகி [QBR2] எனக்குள்ளே உருகிப் போயிற்று. [QBR]
15. என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று; [QBR2] என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது; [QBR2] என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர்.
16. நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; [QBR2] தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது; [QBR2] என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள். [QBR]
17. என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; [QBR2] மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள். [QBR]
18. அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு, [QBR2] என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள்.
19. ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; [QBR2] என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். [QBR]
20. என்னை வாளுக்குத் தப்புவியும்; [QBR2] என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும். [QBR]
21. சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்; [QBR2] காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
22. அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன், [QBR2] திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன். [QBR]
23. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; [QBR2] யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; [QBR2] இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள். [QBR]
24. ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை, [QBR2] அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை. [QBR] அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை; [QBR2] ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார்.
25. நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்; [QBR2] உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக [QBR2] நான் என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். [QBR]
26. ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; [QBR2] யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்; [QBR2] அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக.
27. பூமியின் கடைசிகளெல்லாம் [QBR2] யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்; [QBR] நாடுகளின் குடும்பங்கள் எல்லாம் [QBR2] அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும். [QBR]
28. ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; [QBR2] அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார்.
29. பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்; [QBR2] மரித்து மண்ணுக்குத் திரும்புவோரும், தன் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் [QBR2] அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவார்கள். [QBR]
30. பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்; [QBR2] வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும். [QBR]
31. அவர்கள் அவருடைய நீதியை, [QBR2] இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்: [QBR2] அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 150
சங்கீதம் 22:21
1 என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமல், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? 2 என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை. 3 ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் நீர் பரிசுத்தர். 4 உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர். 5 அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்; உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை. 6 ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல; மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். 7 என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்; அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள் 8 “அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான், யெகோவா அவனை இரட்சிக்கட்டும். அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால் அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள். 9 ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர். நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர். 10 நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்; நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர். 11 நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்; ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது, உதவிசெய்ய ஒருவருமில்லை. 12 அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன. 13 தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல, அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள். 14 என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின; என் இருதயம் மெழுகு போலாகி எனக்குள்ளே உருகிப் போயிற்று. 15 என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று; என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது; என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர். 16 நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது; என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள். 17 என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள். 18 அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு, என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள். 19 ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். 20 என்னை வாளுக்குத் தப்புவியும்; என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும். 21 சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்; காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும். 22 அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன், திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன். 23 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள். 24 ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை, அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை. அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை; ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார். 25 நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்; உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக நான் என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். 26 ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்; அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக. 27 பூமியின் கடைசிகளெல்லாம் யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்; நாடுகளின் குடும்பங்கள் எல்லாம் அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும். 28 ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார். 29 பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்; மரித்து மண்ணுக்குத் திரும்புவோரும், தன் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவார்கள். 30 பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்; வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும். 31 அவர்கள் அவருடைய நீதியை, இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்: அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References