1. யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். [QBR2] நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
2. அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்; [QBR2] அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை. [QBR]
3. நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று, [QBR2] சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர். [QBR]
4. அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்; [QBR2] அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர். [QBR]
5. நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது; [QBR2] நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர். [QBR]
6. நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்; [QBR2] உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர். [QBR]
7. ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; [QBR2] உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம் [QBR2] அவர் அசைக்கப்படமாட்டார்.
8. உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; [QBR2] உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும். [QBR]
9. நீர் வரும் நேரத்தில் [QBR2] அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர். [QBR] யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்; [QBR2] அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். [QBR]
10. நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர், [QBR2] அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர். [QBR]
11. உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், [QBR2] பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது. [QBR]
12. நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது, [QBR2] அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர்.
13. யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; [QBR2] நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம். [PE]