1. [QS]யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். [QE][QS2]நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது. [QE][PBR]
2. [QS]அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்; [QE][QS2]அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை. [QE]
3. [QS]நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று, [QE][QS2]சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர். [QE]
4. [QS]அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்; [QE][QS2]அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர். [QE]
5. [QS]நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது; [QE][QS2]நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர். [QE]
6. [QS]நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்; [QE][QS2]உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர். [QE]
7. [QS]ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; [QE][QS2]உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம் [QE][QS2]அவர் அசைக்கப்படமாட்டார். [QE][PBR]
8. [QS]உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; [QE][QS2]உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும். [QE]
9. [QS]நீர் வரும் நேரத்தில் [QE][QS2]அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர். [QE][QS]யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்; [QE][QS2]அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். [QE]
10. [QS]நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர், [QE][QS2]அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர். [QE]
11. [QS]உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், [QE][QS2]பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது. [QE]
12. [QS]நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது, [QE][QS2]அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர். [QE][PBR]
13. [QS]யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; [QE][QS2]நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம். [QE]