தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? [QBR2] மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? [QBR]
2. பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், [QBR2] ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும், [QBR2] அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது: [QBR]
3. “அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, [QBR2] அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.”
4. பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; [QBR2] யெகோவா அவர்களை இகழ்கிறார். [QBR]
5. அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, [QBR2] தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது: [QBR]
6. “நான் எனது அரசனை [QBR2] என் பரிசுத்த மலையாகிய சீயோனில் [*அல்லது எருசலேம் பட்டணம்] அமர்த்தியிருக்கிறேன்.” [PE][PS]
7. நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: [QBR] அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்; [QBR2] இன்று நான் உமக்குத் தந்தையானேன். [QBR]
8. என்னிடம் கேளும், [QBR2] நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன், [QBR2] பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன். [QBR]
9. நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; [QBR2] மண்பாண்டத்தை உடைப்பதுபோல், [QBR2] நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.”
10. ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; [QBR2] பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள். [QBR]
11. பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், [QBR2] நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள். [QBR]
12. இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; [QBR2] நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்; [QBR] ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும். [QBR2] அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 150
சங்கீதம் 2:33
1 நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? 2 பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது: 3 “அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.” 4 பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; யெகோவா அவர்களை இகழ்கிறார். 5 அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது: 6 “நான் எனது அரசனை என் பரிசுத்த மலையாகிய சீயோனில் *அல்லது எருசலேம் பட்டணம் அமர்த்தியிருக்கிறேன்.” 7 நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன். 8 என்னிடம் கேளும், நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன், பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன். 9 நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; மண்பாண்டத்தை உடைப்பதுபோல், நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.” 10 ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள். 11 பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள். 12 இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்; ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும். அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References