தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? [QE][QS2]மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? [QE]
2. [QS]பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், [QE][QS2]ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும், [QE][QS2]அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது: [QE]
3. [QS]“அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, [QE][QS2]அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.” [QE][PBR]
4. [QS]பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; [QE][QS2]யெகோவா அவர்களை இகழ்கிறார். [QE]
5. [QS]அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, [QE][QS2]தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது: [QE]
6. [QS]“நான் எனது அரசனை [QE][QS2]என் பரிசுத்த மலையாகிய சீயோனில்[* அல்லது எருசலேம் பட்டணம் ] அமர்த்தியிருக்கிறேன்.” [QE]
7. [PS]நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: [PE][QS]அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்; [QE][QS2]இன்று நான் உமக்குத் தந்தையானேன். [QE]
8. [QS]என்னிடம் கேளும், [QE][QS2]நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன், [QE][QS2]பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன். [QE]
9. [QS]நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; [QE][QS2]மண்பாண்டத்தை உடைப்பதுபோல், [QE][QS2]நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.” [QE][PBR]
10. [QS]ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; [QE][QS2]பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள். [QE]
11. [QS]பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், [QE][QS2]நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள். [QE]
12. [QS]இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; [QE][QS2]நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்; [QE][QS]ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும். [QE][QS2]அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 150
1 நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? 2 பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது: 3 “அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.” 4 பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; யெகோவா அவர்களை இகழ்கிறார். 5 அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது: 6 “நான் எனது அரசனை என் பரிசுத்த மலையாகிய சீயோனில்* அல்லது எருசலேம் பட்டணம் அமர்த்தியிருக்கிறேன்.” 7 நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன். 8 என்னிடம் கேளும், நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன், பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன். 9 நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; மண்பாண்டத்தை உடைப்பதுபோல், நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.” 10 ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள். 11 பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள். 12 இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்; ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும். அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References