1. [QS]வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன, [QE][QS2]ஆகாயங்கள் அவருடைய கரங்களின் செயலைப் பிரசித்தப்படுத்துகின்றன. [QE]
2. [QS]அவைகள் நாள்தோறும் பேசுகின்றன; [QE][QS2]இரவுதோறும் அறிவை வெளிப்படுத்துகின்றன. [QE]
3. [QS]அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன; [QE][QS2]அங்கே அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. [QE]
4. [QS]ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது; [QE][QS2]அவைகளின் வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் செல்கின்றன. [QE][QS]யெகோவா வானங்களில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறார். [QE]
[QS2]5. சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும், [QE][QS2]பந்தயத்திற்காக ஓட மகிழ்ச்சியுடனிருக்கும் விளையாட்டு வீரனைப்போலவும் இருக்கிறது. [QE]
6. [QS]அது வானங்களின் ஒரு முனையில் உதித்து, [QE][QS2]மறுமுனைவரை சுற்றிவருகிறது. [QE][QS2]அதின் வெப்பத்திற்குத் ஒன்றும் தப்புவதில்லை. [QE][PBR]
7. [QS]யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது, [QE][QS2]அது ஆத்துமாவுக்குப் புத்துயிரளிக்கிறது. [QE][QS]யெகோவாவினுடைய நியமங்கள் நம்பகமானவை, [QE][QS2]அவை பேதையை ஞானியாக்குகின்றன. [QE]
8. [QS]யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை, [QE][QS2]அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன. [QE][QS]யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை, [QE][QS2]அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன. [QE]
9. [QS]யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது, [QE][QS2]அது என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QE][QS]யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை, [QE][QS2]அவை முற்றிலும் நீதியானவை. [QE][PBR]
10. [QS]அவை தங்கத்தைவிட, [QE][QS2]சுத்தத் தங்கத்தைவிட மிகுந்த விலையுயர்ந்தவை. [QE][QS]அவை தேனைப் பார்க்கிலும், [QE][QS2]கூட்டிலிருந்து வடியும் தெளித்தேனைப் பார்க்கிலும் இனிமையானவை. [QE]
11. [QS]அவைகளால் உமது அடியேன் எச்சரிப்படைகிறேன்; [QE][QS2]அவைகளைக் கைக்கொள்வதால் மிகுந்த பலனுண்டு. [QE]
12. [QS]தன் தவறுகளை அறிந்துணர யாரால் முடியும்? [QE][QS2]என் மறைவான குற்றங்களை எனக்கு மன்னியும். [QE]
13. [QS]விரும்பி செய்யும் பாவங்களிலிருந்து உமது அடியேனைக் காத்துக்கொள்ளும்; [QE][QS2]அவைகள் என்னை ஆளுகை செய்யாதிருப்பதாக. [QE][QS]அப்பொழுது நான் குற்றமற்றவனாயும், [QE][QS2]பெரும் மீறுதல்கள் அறியாதவனாயும் இருப்பேன். [QE][PBR]
14. [QS]என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, [QE][QS2]என் வாயின் வார்த்தைகளும் [QE][QS2]என் இருதயத்தின் தியானமும் உமது பார்வையில் பிரியமாய் இருப்பதாக. [QE]