1. யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன்.
2. யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; [QBR2] என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, [QBR2] என் கேடயம், என் மீட்பின் கொம்பு, என் அரணுமாயிருக்கிறார்.
3. துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; [QBR2] என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன். [QBR]
4. மரணக் கயிறுகளால் நான் சிக்குண்டேன்; [QBR2] அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன. [QBR]
5. பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; [QBR2] மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.
6. என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; [QBR2] என் இறைவனிடம் உதவிக்காகக் கதறினேன்; [QBR] அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்; [QBR2] என் அழுகுரல் அவருடைய செவிக்கு எட்டியது. [QBR]
7. பூமி நடுங்கி அதிர்ந்து, [QBR2] மலைகளின் அஸ்திபாரங்கள் அசைந்தன; [QBR2] யெகோவா கோபமடைந்ததால் அவை நடுங்கின. [QBR]
8. அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று; [QBR2] அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது; [QBR2] நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன. [QBR]
9. அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்; [QBR2] கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன. [QBR]
10. அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; [QBR2] அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார். [QBR]
11. அவர் இருளைத் தமது போர்வையாகவும், [QBR2] வானத்தின் இருண்ட மழைமேகங்களைத் தம்மைச் சுற்றிலும் கூடாரமாகவும் ஆக்கினார். [QBR]
12. அவருடைய சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மேகங்கள் முன்னோக்கிச் சென்றன; [QBR2] அவற்றுடன் பனிக்கட்டி மழையும் மின்னல் கீற்றுக்களும் சென்றன. [QBR]
13. யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; [QBR2] மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது. [QBR]
14. அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்; [QBR2] மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார். [QBR]
15. யெகோவாவே, உமது நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும் [QBR2] உமது கண்டிப்பினாலும் [QBR] கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன; [QBR2] பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன.
16. யெகோவா என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; [QBR2] ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார். [QBR]
17. அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் [QBR2] என்னிலும் அதிக பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார். [QBR]
18. அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; [QBR2] ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார். [QBR]
19. அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; [QBR2] அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.
20. யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; [QBR2] என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார். [QBR]
21. ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; [QBR2] என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை. [QBR]
22. அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; [QBR2] அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை. [QBR]
23. நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, [QBR2] பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். [QBR]
24. யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறும், [QBR2] அவருடைய பார்வையில் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறும் [QBR2] எனக்குப் பலனளித்திருக்கிறார்.
25. உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்; [QBR2] உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர். [QBR]
26. தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்; [QBR2] ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர். [QBR]
27. நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்; [QBR2] ஆனால் பெருமையான பார்வையுள்ளவர்களைத் தாழ்த்துகிறீர். [QBR]
28. யெகோவாவே, நீர் என் விளக்கை எரிந்து கொண்டேயிருக்கச் செய்யும்; [QBR2] என் இறைவன் என் இருளை வெளிச்சமாக்குவார். [QBR]
29. உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; [QBR2] என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.
30. இறைவனுடைய வழி முழு நிறைவானது: [QBR2] யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; [QBR2] அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார். [QBR]
31. யெகோவாவைத்தவிர இறைவன் யார்? [QBR2] நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்? [QBR]
32. இறைவன் பெலத்தை எனக்கு அரைக்கச்சையாகக் கட்டி, [QBR2] என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார். [QBR]
33. அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி, [QBR2] உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார். [QBR]
34. யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; [QBR2] என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும். [QBR]
35. நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர், [QBR2] உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது; [QBR2] உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது. [QBR]
36. என்னுடைய கால்கள் வழுக்காதபடி, [QBR2] நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.
37. நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களைப் பிடித்தேன்; [QBR2] அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை. [QBR]
38. அவர்கள் எழுந்திருக்காதபடி, நான் அவர்களை முறியடித்தேன்; [QBR2] அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள். [QBR]
39. யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்; [QBR2] என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர். [QBR]
40. நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; [QBR2] நான் அவர்களை அழித்தேன். [QBR]
41. அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள், [QBR2] ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை; [QBR2] யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை. [QBR]
42. நான் அவர்களை காற்றில் கிளம்பும் தூசியைப்போல் நொறுக்கினேன்; [QBR2] நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரி எறிந்தேன். [QBR]
43. நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்; [QBR2] நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர். [QBR] நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள். [QBR2]
44. வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்; [QBR2] அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். [QBR]
45. அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து, [QBR2] தங்கள் அரண்களிலிருந்து நடுங்கிக்கொண்டு வருகிறார்கள்.
46. யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக! [QBR2] என் இரட்சகராகிய இறைவன் உயர்த்தப்படுவாராக! [QBR]
47. எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே; [QBR2] நாடுகளை எனக்குக்கீழ் அடங்கியிருக்கச் செய்பவரும் அவரே. [QBR2]
48. என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும் அவரே. [QBR] நீர் என் பகைவர்களுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்; [QBR2] என்னை என் வன்முறையாளர்களிடமிருந்து தப்புவித்தீர். [QBR]
49. ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; [QBR2] உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.
50. யெகோவா தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்; [QBR2] அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் [QBR2] அவனுடைய சந்ததிகளுக்கும் தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார். [PE]