1. [QS]யெகோவாவே, என்னுடைய நீதியான விண்ணப்பத்தைக் கேளும், [QE][QS2]என் கதறுதலுக்குச் செவிகொடும்; [QE][QS]வஞ்சகமில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் [QE][QS2]என் மன்றாட்டைக் கேளும். [QE]
2. [QS]நான் குற்றமற்றவனென்ற தீர்ப்பு உம்மிடத்திலிருந்து வரட்டும்; [QE][QS2]உமது கண்கள் நேர்மையானதைக் காணட்டும். [QE][PBR]
3. [QS]நீர் என் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்தாலும், [QE][QS2]இரவில் என்னைச் சோதித்தாலும், [QE][QS]நீர் எந்தத் தீங்கையும் கண்டுபிடிக்கமாட்டீர்; [QE][QS2]என் வாயினால் நான் பாவம் செய்யமாட்டேனென்று தீர்மானித்திருக்கிறேன். [QE]
4. [QS]மனிதர்கள் என்னைத் தீமைசெய்ய வற்புறுத்தினாலும், [QE][QS2]உமது உதடுகளின் கட்டளையினால் வன்முறையாளர்களின் வழிகளிலிருந்து, [QE][QS2]என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். [QE]
5. [QS]உம்முடைய வழிகளை, என் காலடிகள் உறுதியாய்ப் பற்றிக்கொண்டன; [QE][QS2]என்னுடைய பாதங்கள் தடுமாறவில்லை. [QE][PBR]
6. [QS]இறைவனே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QE][QS2]ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுக்கிறவர். [QE][QS2]எனக்குச் செவிகொடுத்து என் மன்றாட்டைக் கேளும். [QE]
7. [QS]உம்மிடம் தஞ்சம் அடைந்தோரை, [QE][QS2]அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தினால் காப்பாற்றுகிறவரே, [QE][QS2]உமது உடன்படிக்கையின் அன்பின் அதிசயத்தைக் காண்பியும். [QE]
8. [QS]உமது கண்ணின் மணியைப்போல் என்னைக் காத்துக்கொள்ளும்; [QE][QS2]உமது சிறகுகளின் நிழலின்கீழ், [QE]
9. [QS]என்னைத் தாக்கும் கொடியவர்களிடமிருந்தும் [QE][QS2]என்னைச் சூழ்ந்துகொள்ளும் என் பகைவரிடமிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும். [QE][PBR]
10. [QS]அவர்கள் தங்கள் உணர்வற்ற இருதயங்களை கடினமாக்குகிறார்கள், [QE][QS2]அவர்களின் வாய்கள் பெருமையுடன் பேசுகின்றன. [QE]
11. [QS]அவர்கள் என்னைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள், [QE][QS2]இப்பொழுது என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். [QE][QS]என்னைத் தரையில் விழத்தள்ளுவதற்காக [QE][QS2]அவர்களுடைய கண்கள் விழிப்பாயிருக்கின்றன. [QE]
12. [QS]அவர்கள் பசியால் துடித்து இரையைத் தேடுகிற சிங்கத்தைப் போலவும் [QE][QS2]மறைவில் பதுங்கியிருக்கிற பெரும் சிங்கத்தைப் போலவும் இருக்கிறார்கள். [QE][PBR]
13. [QS]யெகோவாவே, எழுந்தருளும், நீர் அவர்களை எதிர்த்து வீழ்த்திவிடும்; [QE][QS2]கொடியவர்களிடமிருந்து உமது வாளினால் என்னைத் தப்புவியும். [QE]
14. [QS]யெகோவாவே, இப்படிப்பட்டவர்களிடமிருந்தும், [QE][QS2]இம்மையிலேயே தங்கள் வெகுமதியைப் பெறுகிற இவ்வுலக மனிதரிடமிருந்தும், [QE][QS2]உமது கரத்தினால் என்னைக் காப்பாற்றும்; [QE][QS]நீர் கொடியவர்களுக்கென்று வைத்திருக்கிறவைகளால் அவர்களுடைய வயிற்றை நிரப்பும்; [QE][QS2]அவர்களுடைய பிள்ளைகள் நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளட்டும்; [QE][QS2]மீதியானதை அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லட்டும். [QE][PBR]
15. [QS]நானோ, நீதியில் உமது முகத்தைக் காண்பேன்; [QE][QS2]நான் விழித்தெழும்போது உம்மைக் கண்டு திருப்தியடைவேன். [QE]