1. [QS]இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும், [QE][QS2]ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன். [QE][PBR]
2. [QS]நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா; [QE][QS2]உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை” என்று சொன்னேன். [QE]
3. [QS]நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள் [QE][QS2]என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன.” [QE]
4. [QS]பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும். [QE][QS2]இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்; [QE][QS2]அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன். [QE][PBR]
5. [QS]யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்; [QE][QS2]எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர். [QE]
6. [QS]எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; [QE][QS2]நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு. [QE]
7. [QS]எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; [QE][QS2]இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது. [QE]
8. [QS]யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். [QE][QS2]அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன். [QE][PBR]
9. [QS]ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; [QE][QS2]என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும். [QE]
10. [QS]ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; [QE][QS2]உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். [QE]
11. [QS]வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்; [QE][QS2]உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும், [QE][QS2]உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர். [QE]