தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும், [QBR2] ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன்.
2. நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா; [QBR2] உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை” என்று சொன்னேன். [QBR]
3. நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள் [QBR2] என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன.” [QBR]
4. பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும். [QBR2] இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்; [QBR2] அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன்.
5. யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்; [QBR2] எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர். [QBR]
6. எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; [QBR2] நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு. [QBR]
7. எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; [QBR2] இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது. [QBR]
8. யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். [QBR2] அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன்.
9. ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; [QBR2] என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும். [QBR]
10. ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; [QBR2] உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். [QBR]
11. வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்; [QBR2] உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும், [QBR2] உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 150
சங்கீதம் 16:89
1 இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும், ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன். 2 நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா; உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை” என்று சொன்னேன். 3 நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள் என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன.” 4 பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும். இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்; அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன். 5 யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்; எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர். 6 எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு. 7 எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது. 8 யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன். 9 ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும். 10 ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். 11 வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்; உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும், உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References