1. யெகோவாவைத் துதியுங்கள். வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்; [QBR2] மேலே உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். [QBR]
2. அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்; [QBR2] அவருடைய பரலோக சேனைகளே, எல்லோரும் அவரைத் துதியுங்கள். [QBR]
3. சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்; [QBR2] பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள். [QBR]
4. மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; [QBR2] ஆகாயங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
5. அவர் கட்டளையிட அவை படைக்கப்பட்டதால் [QBR2] அவைகள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும். [QBR]
6. யெகோவா அவைகளை எப்பொழுதும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தினார்; [QBR2] அழிந்துபோகாத ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்.
7. பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள், [QBR2] பெரிய கடல் உயிரினங்களே, கடலின் ஆழங்களே, [QBR]
8. நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே, [QBR2] அவருடைய கட்டளையை நிறைவேற்றும் புயல்காற்றே, [QBR]
9. மலைகளே, குன்றுகளே, [QBR2] பழமரங்களே, அனைத்து கேதுரு மரங்களே, [QBR]
10. உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே, [QBR2] சிறிய உயிரினங்களே, பறக்கும் பறவைகளே, [QBR]
11. பூமியின் அரசர்களே, சகல நாடுகளே, [QBR2] இளவரசர்களே, பூமியிலுள்ள சகல ஆளுநர்களே, [QBR]
12. இளைஞர்களே, இளம்பெண்களே, [QBR2] முதியவர்களே, பிள்ளைகளே அவரைத் துதியுங்கள்.
13. அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்; [QBR2] ஏனெனில் அவருடைய பெயர் மட்டுமே புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது; [QBR2] அவருடைய சிறப்பு பூமிக்கும், வானங்களுக்கும் மேலாக இருக்கிறது. [QBR]
14. அவர் தம் உண்மையுள்ள பணியாளர்களாகிய, [QBR2] இருதயத்திற்கு உகந்த இஸ்ரயேல் மக்கள் துதிக்கும்படி, [QBR] அவர் தம்முடைய மக்களுக்கென ஒரு வல்லமையுள்ள அரசனை உயர்த்தியிருக்கிறார்; [QBR2] அதற்காக அவரை எல்லா பரிசுத்தவான்களும் இஸ்ரயேலரும் துதிக்கிறார்கள். யெகோவாவைத் துதியுங்கள். [PE]