1. [QS]யெகோவாவைத் துதியுங்கள். [QE][PBR] [QS]வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்; [QE][QS2]மேலே உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். [QE]
2. [QS]அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்; [QE][QS2]அவருடைய பரலோக சேனைகளே, எல்லோரும் அவரைத் துதியுங்கள். [QE]
3. [QS]சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்; [QE][QS2]பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள். [QE]
4. [QS]மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; [QE][QS2]ஆகாயங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள். [QE][PBR]
5. [QS]அவர் கட்டளையிட அவை படைக்கப்பட்டதால் [QE][QS2]அவைகள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும். [QE]
6. [QS]யெகோவா அவைகளை எப்பொழுதும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தினார்; [QE][QS2]அழிந்துபோகாத ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார். [QE][PBR]
7. [QS]பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள், [QE][QS2]பெரிய கடல் உயிரினங்களே, கடலின் ஆழங்களே, [QE]
8. [QS]நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே, [QE][QS2]அவருடைய கட்டளையை நிறைவேற்றும் புயல்காற்றே, [QE]
9. [QS]மலைகளே, குன்றுகளே, [QE][QS2]பழமரங்களே, அனைத்து கேதுரு மரங்களே, [QE]
10. [QS]உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே, [QE][QS2]சிறிய உயிரினங்களே, பறக்கும் பறவைகளே, [QE]
11. [QS]பூமியின் அரசர்களே, சகல நாடுகளே, [QE][QS2]இளவரசர்களே, பூமியிலுள்ள சகல ஆளுநர்களே, [QE]
12. [QS]இளைஞர்களே, இளம்பெண்களே, [QE][QS2]முதியவர்களே, பிள்ளைகளே அவரைத் துதியுங்கள். [QE][PBR]
13. [QS]அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்; [QE][QS2]ஏனெனில் அவருடைய பெயர் மட்டுமே புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது; [QE][QS2]அவருடைய சிறப்பு பூமிக்கும், வானங்களுக்கும் மேலாக இருக்கிறது. [QE]
14. [QS]அவர் தம் உண்மையுள்ள பணியாளர்களாகிய, [QE][QS2]இருதயத்திற்கு உகந்த இஸ்ரயேல் மக்கள் துதிக்கும்படி, [QE][QS]அவர் தம்முடைய மக்களுக்கென ஒரு வல்லமையுள்ள அரசனை உயர்த்தியிருக்கிறார்; [QE][QS2]அதற்காக அவரை எல்லா பரிசுத்தவான்களும் இஸ்ரயேலரும் துதிக்கிறார்கள். [QE][PBR] [QS]யெகோவாவைத் துதியுங்கள். [QE]