1. [QS]யெகோவாவைத் துதியுங்கள். [QE][PBR] [QS]நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது, [QE][QS2]அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது. [QE][PBR]
2. [QS]யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்; [QE][QS2]அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார். [QE]
3. [QS]அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி, [QE][QS2]அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். [QE]
4. [QS]அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, [QE][QS2]அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார். [QE]
5. [QS]நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்; [QE][QS2]அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை. [QE]
6. [QS]யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்; [QE][QS2]ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார். [QE][PBR]
7. [QS]யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்; [QE][QS2]யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள். [QE][PBR]
8. [QS]அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்; [QE][QS2]பூமிக்கு மழையைக் கொடுத்து, [QE][QS2]மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார். [QE]
9. [QS]மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் [QE][QS2]அவர் உணவு கொடுக்கிறார். [QE][PBR]
10. [QS]குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை, [QE][QS2]படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை; [QE]
11. [QS]யெகோவா தமக்குப் பயந்து, [QE][QS2]தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில் [QE][QS2]வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார். [QE][PBR]
12. [QS]எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; [QE][QS2]சீயோனே உன் இறைவனைத் துதி. [QE][PBR]
13. [QS]ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, [QE][QS2]உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார். [QE]
14. [QS]அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து, [QE][QS2]சிறந்த கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். [QE][PBR]
15. [QS]அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்; [QE][QS2]அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது. [QE]
16. [QS]அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்; [QE][QS2]உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார். [QE]
17. [QS]அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்; [QE][QS2]அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்? [QE]
18. [QS]அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; [QE][QS2]அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது. [QE][PBR]
19. [QS]அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும், [QE][QS2]தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார். [QE]
20. [QS]அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை; [QE][QS2]அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள். [QE][PBR] [QS]யெகோவாவைத் துதி. [QE]