தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவைத் துதி [*எபிரெயத்தில் அல்லேலூயா வச 10] . என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
2. நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; [QBR2] நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன். [QBR]
3. உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், [QBR2] உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே. [QBR]
4. அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; [QBR2] அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும். [QBR]
5. யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், [QBR2] தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் [QBR2] நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
6. அவரே வானத்தையும் பூமியையும் [QBR2] கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; [QBR2] யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். [QBR]
7. அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; [QBR2] பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். [QBR] யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார், [QBR2]
8. யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், [QBR] யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், [QBR2] யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார். [QBR]
9. யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், [QBR2] அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், [QBR2] ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.
10. யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; [QBR2] சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 146 / 150
சங்கீதம் 146:41
1 யெகோவாவைத் துதி *எபிரெயத்தில் அல்லேலூயா வச 10 . என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. 2 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன். 3 உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே. 4 அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும். 5 யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 6 அவரே வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். 7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார், 8 யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார். 9 யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார். 10 யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 146 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References